யார் இந்த திருநாவுக்கரசர்.

0
1

 

 

யார் இந்த திருநாவுக்கரசர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம்  தீயத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் வசித்து வருகிறார். எம்.ஏ.பி.எல் படித்துள்ள இவர் எம்.ஜி,ஆர் காலத்திலிருந்து அரசியலில் உள்ளார்.  அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கிய பிறகு 1977- ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் அதிமுக சார்பில்”இரட்டை இலை” சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980,1984  தேர்தல்களிலும் இதே தொகுதியில் வென்றார்.

2

எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு அதிமுக பிளவுப்பட்டபோது 1989-இல் இதே தொகுதியில் ஜெயலலிதா அணி சார்பில் “சேவல்” சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். அதிமுகவில் இருந்து 1991-ல் விலகியவர், அண்ணா புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்து, அறந்தாங்கி தொகுதியில் “குடை” சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.

1966-ல் அதிமுக சார்பில் அறந்தாங்கியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். ஒரே தொகுதியில் தொடர்ந்து 6 முறை வென்ற ஒரே தமிழக எம்எல்ஏ என்ற அவரது சாதனை இன்றும் முறியடிக்கப்படவில்லை.

பின்னர் அதிமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் அதிமுக என்ற கட்சியினை தொடங்கினார். 1998 மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து புதுக்கோட்டையில் “மாம்பழம்” சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1999 மக்களவைத் தர்தலில், புதுக்கோட்டையில் திமுக -பாஜக கூட்டணியில் இடம்பெற்ற எம்.ஜி.ஆர் அதிமுக சார்பில் “மோதிரம்” சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.

2014 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக “கை” சின்னத்தில் போட்டியிட்டு தோலிவியடைந்தார். தற்போது திருச்சி தொகுதியைப் பெற்றுள்ள திருநாவுக்கரசர், “கை” சின்னத்தை பெற்றுள்ளார்.

 

 

3

Leave A Reply

Your email address will not be published.