பெட்ரோல் பங்கில் கண்ணாடியை உடைத்து ரூ.1.5 லட்சம் கொள்ளை அடித்த மர்ம நபர்கள்.

0
D1

பெட்ரோல் பங்கில் கண்ணாடியை உடைத்து ரூ.1.5 லட்சம் கொள்ளை அடித்த மர்ம நபர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெட்ரோல் பங்கின் அலுவலக கண்ணாடியை உடைத்து, ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து, சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

N2

அறந்தாங்கி அக்ரஹாரத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர், அறந்தாங்கி – பட்டுக்கோட்டை சாலையில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். அதிகாலை நான்கு மணி அளவில் ஹெல்மட் அணிந்த படி வந்த இருவர், அலுவலக கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று, ஒன்றரை லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

D2

கொள்ளை நடக்கும் போது பணியில் இருந்த நான்கு ஊழியர்களும் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளதால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.