நாளை நிறைவடையும் வேட்பு மனு தாக்கல்

0
Business trichy

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவடையும் நிலையில், இன்று வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாக உள்ள நிலையில் வேட்பாளர்கள் பலர் இன்று மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

தமிழச்சி தங்கபாண்டியன்:

UKR

தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை அடையாறு மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

image

நீதிபதி கர்ணன் வேட்பு மனு:

மத்திய சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

image

தென் சென்னை:

குப்பல்ஜி தேவதாஸ் என்ற சுயேட்சை வேட்பாளர் தென் சென்னை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்கான தொகையை சில்லரை காசுகளாக அவர் கொண்டு வந்திருந்தார்.

அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல்:

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பொன்னையாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

image

ஈவிகேஎஸ் இளங்கோவன்:

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பல்லவி பல்தேவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

image

திமுக கூட்டணி வேட்பாளர்:

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

image

கலாநிதி வீராசாமி:

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, வள்ளலார் நகரிலுள்ள மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

BG Naidu

image

தி.மு.க. வேட்பாளர் பழனிமாணிக்கம்:

தஞ்சாவூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் வேட்பு மனு தாக்கல்:

தி.மு.க கூட்டணி சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும வேட்பாளர் பாரிவேந்தர், மாவட்ட தேர்தல் அலுவலரும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவருமான வே. சாந்தாவிடம் வேட்பு மனு அளித்தார்.

பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்:

கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் வேட்பு மனு தாக்கல்:

திருச்சி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன, மாவட்ட ஆட்சியரான தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை அளித்தார்.

அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் வேட்பு மனு தாக்கல்:

மதுரையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுவரை மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தது.

பாஜக வேட்பாளர் எச். ராஜா வேட்பு மனு தாக்கல்:

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் H. ராஜா, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜெயகாந்தனிடம் வேட்புமனுவை வழங்கினார்.

காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் வேட்பு மனு தாக்கல்:

திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் இன்று வேட்பு மனுவை சமர்பித்தார்.

தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்பு மனு தாக்கல்:

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் வேட்பு மனு தாக்கல்:

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான தமிழிசை சவுந்திரராஜன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு அளித்தார்.

திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு தாக்கல்:

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை வழங்கினார்.

-பாலிமர் செய்தி

BG Naidu 1

Leave A Reply

Your email address will not be published.