
தேர்தல் ஆணையத்தின் விதிமுறையால் முடங்கிப்போன அச்சுத்தொழில்.
இந்தியா நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி முதல் 7கட்டமாக நடைபெறும் எனவும், அந்தநேரத்திலேயே நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்றத்தேர்தலுக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் எனவும் இந்தியத்தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 10ம் தேதி அறிவித்தது. அதைத்தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளைகளும் அன்றைய தினமே அமலுக்கும் வந்தன.
இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளின் ஒன்றாக வேட்பாளர்களை மையப்படுத்தியோ அல்லது வாக்குகளிக்கவேண்டியோ போஸ்டர்கள், பதாகைகள் அச்சடித்து பொதுஇடங்களில் வைக்கத்தடை செய்யப்பட்டுள்ளன. பொதுவாக, போஸ்டர்கள், பதாகைகள் உள்ளிட்ட அச்சுத்தொழிலானது பெரும்பாலம் அரசியல்வாதிகளை சார்ந்தே வைக்கப்படுகின்றன. குறிப்பாக தேர்தல் சமயங்களில் இத்தொழிலின் பயன்பாடு அதிகளவில் இருக்கும். ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த நன்னடத்தை விதியின் காரணமாக அச்சுத்தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து திருச்சியில் உள்ள பிரபல அச்சம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர் கூறுகையில், லித்தோஸ், பிளக்ஸ் உள்ளிட்ட அச்சங்களில் பெரும்பாலம் அரசியல் கட்சிகளோ அல்லது இயக்கங்களோதான் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். காதணிவிழா தொடங்கி கோவில் திருவிழாக்கள் வரை அனைத்திலும் தற்போது பிரபலமான அரசியல் தலைவர்களின் முன்னிலைப்படுத்தே அச்சுசெய்யப்படுகின்றன. குறிப்பாக, தேர்தல் சமயத்தில் அச்சுதொழிலின் பங்கு அவர்களுக்கு அதிகம் தேவைப்படும். எங்ளுக்கும் அதுவே சீசனாக இருக்கும். எனவே, தேர்தல் சமயத்தில் கடனையாவது வாங்கி தொழிலுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வைத்திருப்போம். ஏனெனில், இது போன்ற சமயங்களில் 24மணிநேரம் கூட இயந்திரம் இயங்கிக்கொண்டிருக்கும்.
ஆனால், தற்போது தேர்தல் ஆணையம் விளம்பரத்திற்காக லித்தோஸ், பிளக்ஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்ததால், அச்சுதொழில் சுத்தமாக முடிங்கியுள்ளது. ஒரு நாளைக்கு நான்கு ஆடர்கள் வருதே பெரிய விஷயமாக உள்ளது. மின்கட்டணம், இயந்திரத்தேய்மானம், வாடகை, வேலையாட்களுக்கு சம்பளம் என கணக்கு போட்டால் சுத்தமாக தொழில் செய்யமுடியாத நிலையே உள்ளது. தற்போது, கடன் கொடுப்பதற்கு கூட யாரும் முன்வருவதில்லை. இன்னும் இரண்டு மாதங்களை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதே தெரியவில்லை என்கிறார் வேதனையுடன்.
