திருச்சி நாடாளுமன்ற தேர்தலில்100 சதவீதம் வாக்கு!

0
1 full

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2019 நடைபெறவுள்ளதையொட்டி, மத்திய பேருந்து நிலையத்தில், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்களித்து ஜனநாயகத்தை வலுபடுத்த மாபெரும் விழிப்புணர்வு கையெழுத்து நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு.சு.சிவராசு,இ.ஆ.ப., அவர்கள் கையெழுத்திட்டும், கைரேகை பதிவு செய்தும் இன்று(25.03.2019) தொடங்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்களிடையே பல்வேறு நிலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. துண்டு பிரசுரங்கள் மூலமாகவும், கேஸ் சிலிண்டரில் ஸ்டிக்கர் ஒட்டியும், ஆட்டோக்களில் விளம்பர நோட்டீஸ் ஒட்டியும், இளநீர் மற்றும் தர்ப்பூசணியில் ஸ்டிக்கர் ஒட்டியும், மகளிர்களுக்கு விழிப்புணர்வு கோலப்போட்டி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்கள் முதல் வாக்கினை வாக்களிக்க வலியுறுத்தி உறுதிமொழி இயக்கம், 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியனின் முதல் பெருமை வாக்களிப்பதே, வருகின்ற ஏப்ரல் 18 அன்று அனைவரும் தவறாமல் 100 சதவீதம் வாக்களிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்டத்தில் உள்ள 10 ஆயிரம் வாக்காளர்களுக்கு அஞ்சல் துறையின் மூலம் வீடுவீடாக விழிப்புணர்வு கடிதம் வழங்கும் நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக ஒவ்வொரு நாளும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று (25.03.2019) Youth Exnora International Student’s Exnora Trichy M.A.M கல்லூரி மாணவர்கள் மத்திய பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக மாபெரும் கையெழுத்து நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டும் மற்றும் கைரேகை பதித்தும் விழிப்புணர்வு நிகழச்சியினை தொடங்கி வைத்தார்.

2 full

மேலும் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. துண்டு பிரசுரங்களில் வாக்களிப்பது நம் அனைவரின் அடிப்படை ஜனநாயக கடமை மற்றும் உரிமை வாக்குரிமை ஓர் புனிதமான உரிமை. வாக்களிப்பது நம்மை இந்திய குடிமகனாக உறுதி செய்கிறது. தவறாது வாக்களியுங்கள், நேர்மையாக வாக்களியுங்கள், போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எம்.ஏ.எம். கல்லூரி செயலாளர் திருமதி.பாதிமாபத்தூல்மாலுக், திரு.பி.மோகன், டாக்டர்.பி.சுப்புரத்தின பாரதி மற்றும் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.