சில்லறையிடம் சிக்கிக்கொண்ட அரசு அதிகாரிகள்.

0

அரசு அதிகாரிகளை 2 மணிநேரம் திணறடித்த சுயேட்சை வேட்பாளர்.

ரூ.25ஆயிரம் சில்லரை நாணயங்களோடு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர், 2 மணிநேரம் எண்ணிய அதிகாரிகள்.

தென்சென்னை மக்களைவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை குப்பல்ஜீ தேவதாஸ் என்ற சுயேட்சை வேட்பாளர் டெபாசிட் தொகை ரூ.25ஆயிரத்தை சில்லரையாக கொண்டுவந்துள்ளார். அவற்றை எண்ணி முடிக்க அதிகாரிகள் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டனர்.

வாளி மற்றும் பாத்திரங்கள் நிரம்ப சில்லரை நாணயங்களோடு டெபாசிட் தொகையான 25 ஆயிரம் ரூபாயையும், இரண்டு , ஐந்து, மற்றும் பத்து ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்திருந்தார் குப்பல் ஜீ தேவதாஸ். இது குறித்து கேட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ரூபாய் தாள்களாக தன்னிடம் இல்லை எனவும் இதை ஏற்றுக்கொள்ளும் படியும் முறையிட்டுள்ளார்.

இதன், காரணத்தினால் அருடைய சில்லரை நாணயங்களை ஏற்றுக்கொண்டு மற்ற தேர்தல் அதிகாரிகளிடம் அதனை எண்ணி சரிபார்க்க அறிவுறுத்தினார்.
அதன் பின், நாணயங்களை முழுதாக எண்ணி முடிக்க இரண்டு மணி நேரமானதோடு 12 அதிகாரிகள் அந்த பணியில் ஈடுபட்டதாகவும் பின்னர் தான் வேட்புமனுவை பெற்றுக்கொண்டதாகவும் குப்பல்ஜி தேவதாஸ் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.