கேபிள் டிவியை கண்காணிக்க மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் குழு அமைப்பு

0
D1

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்  பாராளுமன்ற பொது தேர்தல் 2019, கேபிள் டிவி நடத்துபவர்கள் தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்ற வேண்டும் –  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

கேபிள் டிவியில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை கண்காணிக்க மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை தலைவராக கொண்டு (Media Certification and Monitoring Committee) ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

D2
N2

தேர்தல் தொடர்பான அனைத்து விளம்பரங்களுக்கும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் அனுமதி பெற்ற பின்னரே விளம்பரம் செய்யப்பட வேண்டும், அனுமதி பெற்றதற்கான ஆணை எண்ணுடன் விளம்பரம் செய்ய வேண்டும்.

தேர்தல் விளம்பரம் செய்யப்படுவதற்கு அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மூன்று தினங்களுக்கு முன்பாகவும், சுயேட்சை மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியினர் 7 தினங்களுக்கு முன்பாவும் விளம்பரம் செய்யப்பட உள்ள குறுந்தகடு மற்றும் இரு நகல்கள் மேற்படி இக்குழுவிற்கு அனுப்பி அதிலுள்ள விபரங்களை குழவினர் பார்வையிட்டு  முன் அனுமதி பெற்ற பின்னரே விளம்பரம் செய்யப்பட வேண்டும்.

விளம்பரம் செய்ய அனுமதி கோரும் மனுவில் அவ்விளம்பரம் தயாரிக்க ஏற்படும் செலவுத்தொகையை குறிப்பிடவேண்டும் ஒருமுறை விளம்பரம் செய்ய கேபிள் டிவி நிறுவனத்திற்கான கட்டண தொகை எவ்வளவு என்பதையும் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு நாளும் அவ்விளம்பரம் எத்தனை முறை ஒளிப்பரப்பப்பட உள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும். விளம்பரம் கட்டணம் காசோலை அல்லது வங்கி வரையோலை மூலமாக வழங்கப்பட உள்ள விபரம் குறித்தும் குறிப்பிட வேண்டும். தனியார் – கட்சி வேட்பாளரால் விளம்பரம் செய்யப்பட உள்ளதாக இருந்தால் அந்நபர் உறுதிமொழியினை அளிக்கப்பட வேண்டும்.

மேற்படி வீதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது Cable Television Network Regulation Act, 1955 E -பிரிவு 11,12 மற்றும் 16 ஆகிய விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

N3

Leave A Reply

Your email address will not be published.