“கல்வி மற்றும் கலாச்சார பண்பாட்டுக் கலை விழா”

“கல்வி மற்றும் கலாச்சார பண்பாட்டுக் கலை விழா”
திருச்சி ஜோசப் கல்லூரி- செப்படு துறையானது திருச்சிராப்பள்ளி மாவட்ட குடிசை வாழ் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை அதிகப்படுத்தவும், கலை திறமைகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு “கல்வி மற்றும் கலாச்சார பண்பாட்டுக் கலை விழா” இவ்விழாவில் கல்வி குறித்த விழிப்புணர்வு, கணினிஆய்வகம், அறிவியல் ஆய்வகம், நூலகம், அருங்காட்சியகம் போன்றவற்றை மாணவர்கள் பார்வையிட்டனர். இதில் 15 குடிசை வாழ் பகுதியிலிருந்து 200 -க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில், செப்படு விரிவாக்க துறை இயக்குநர் தொடக்க உரையாற்றினார். அதை தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக திரு. மருதநாயகம் (வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர்) கலந்து கொண்டு கல்வியின் அவசியம் குறித்தும், எதிர் காலத்தில் உயர் கல்வி படிப்பதற்கு ஜோசப் கல்லூரியை பயன்படுத்தி முன்னேறுவது குறித்தும் பேசினார்.

இவ்விழாவின், சிறப்பு நிகழ்வாக இளங்கனல் தொண்டு நிறுவனமும் சமாதன கலைக் குழுவும் இணைந்து பொம்மலாட்டம் நிகழ்ச்சியின் மூலம் கல்வியின் அவசியத்தை பற்றியும், அனைவரும் உயர்கல்வி வரை படித்து நல்ல நிலைக்கு வருவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
பள்ளி குழந்தைக்களுக்கு விளையாட்டு துறை மாணவர்கள் பல்வேறு போட்டிகளை நடத்தி 45 வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர் விழாவின் இறுதியில், கல்லூரி செயலர் அருட்தந்தை. ஆண்டனி பாப்புராஜ் அவர்கள் பரிசு வழங்கி, மாணவர்களை வாழத்தினார். பள்ளி குழந்தைகள் கலந்து கொள்ள கல்லூரி மாணவர்கள் சுமார் 75 நபர்கள் உதவினர். இந்நிகழ்வுவில் அனைவருக்கும் மதிய உணவும், சிறப்பு பரிசும் வழங்கப்பெற்றன. இவ்விழாவில் செப்படு-விரிவாக்க துறை ஒருங்கிணைபாளர்கள் ராஜா மற்றும் விஜய குமார் முறையே வரவேற்பும் நன்றியும் கூறினார். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைபாளர் ஜெயசீலன் செய்தார்.
