ஓட்டுச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை.

0

ஓட்டுச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல டை.

திருச்சி- லோக்சபா தேர்தலில் ஒட்டுச் சாவடிக்குள், அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி ஏஜென்ட்கள் செல்போன் கொண்டு செல்ல தேர்தல் கமிஷன் தடை விதித்தது. அதே சமயம், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், எஸ்எம்எஸ் மூலம் தகவல் அளிக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது.

food

தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ள லோக்சபா தேர்தளுக்கான ஓட்டுப்பதிவின்போது,கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு விதிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி ஓட்டுச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்த தடை வித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் கமிஷன் விதிமுறைகளில் கூறியிருப்பதாவது;

லோக்சபா தேர்தலின் போது அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட எல்லா வேட்பாளர்களின் ஓட்டுச்சாவடிகள் ஏஜெண்டுகள் ஓட்டுச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது. ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் மட்டுமே தங்கள் செல்போன்களை பயன்படுத்தலாம். அவர்கள் செல்போனை தேர்தல் அதிகாரிகள் எந்த நேரமும் தொடர்பு கொள்வார்கள். அதேசமயம், ஒட்டுச்சாவடி தலைமை தலைமை அலுவலர் தங்கள் தேவைகளுக்கு உடனடியாக தொடர்புடைய அதிகாரிகளுடன் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும். வெளிநபர்களுக்கோ இந்த செல்போனில் இருந்து தொடர்பு கொள்ளக்கூடாது. இந்த செல்போன் எப்போதும் ஆன் செய்து இருக்க வேண்டும். வேறு செல்போன்களுக்கு ஓட்டுச்சாவடியில் கட்டாயமாக அனுமதியில்லை

gif 4

Leave A Reply

Your email address will not be published.