ஃபேக் ஐ.டியை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்!

0
1 full

சட்டரீதியாகப் பார்த்தால்,  நம் நாட்டில் சட்டங்கள் கடுமையாக இருக்கின்றன. ஆனால், குற்றவாளிகளுக்குத் தண்டனை தருகிற விஷயத்தில் உறுதித்தன்மை இல்லை. ‘என்ன தப்பு செஞ்சாலும் என்னிக்காவது வெளில வந்துடலாம்’ என்கிற நிலைமையில்தான் நம் நாட்டின் நீதி பரிபாலனம் இருக்கிறது.

பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்ட பெண்களில் பலரையும் சமூகவலைத்தளங்கள் வழியாகத்தான் குற்றவாளிகள் வலை வீசிப் பிடிக்கிறார்கள். சமீபத்தில், பெண்களுக்கு எதிராக  நடந்த பாலியல் வன்கொடுமைகள் இந்தப் பாடத்தைத்தான் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றன. அதனால், சமூகவலைதளங்களை பெண்கள் எந்தளவுக்கு ஜாக்கிரதையாகப் பயன்படுத்த வேண்டும், பேக் ஐ.டி.யை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று டிப்ஸ் தருகிறார் சைபர் லா வழக்கறிஞரும் டிஜிட்டல் செக்யூரிட்டி ஆஃப் இந்தியாவின் சேர்மனுமான வி. ராஜேந்திரன். (V Rajendran, Cyber Law Advocate and Chairman of Digital Security Assn. of India).

 

” சைபர் க்ரைம்களை பொறுத்தவரை, சமூகவலைதளங்களை பெண்கள் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்கிற உபதேச வார்த்தைகள் மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பதால், எந்தப் பயனுமே இல்லை. அதற்குப் பதில் கயவர்களைக் கண்டறிய, வழிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பதுதான் மிகச்சரியான தீர்வாக இருக்கும் என்பது என்னுடைய எண்ணம்.

 

2 full

பெண்களுக்கு எதிரான சைபர் கிரைம் பிரச்னையை தொழில்நுட்பரீதியாக, சட்டரீதியாக,புரொபைல் மூலமாக  என மூன்று வழியாகக் கையாளலாம். இதில் தொழில்நுட்பத்தை முதலில் பார்க்கலாம். சமூகவலைத்தளங்களில் ஒரு டேட்டாவை போட்டு விட்டீர்கள் என்றால்,  நீங்கள் அப்லோடு செய்ததை டெலிட் செய்துவிடலாம் என்கிற வழி இருக்கிறது. ஆனால், நீங்கள் அப்லோட் செய்த உங்களுடைய புகைப்படத்தை 10 நிமிடங்கள் கழித்து டெலிட் செய்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்குள் அந்தப் படத்தை வேறு யாராவது பார்த்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

 

ஒரு தடவை டேட்டாவை அனுப்பி விட்டீர்கள் என்றால், அனுப்பியதுதான். ஒன்றும் செய்ய முடியாது. அது எங்கேயாவது சுற்றிக்கொண்டுதான் இருக்கும். அதை எடுக்க முடியாது. இதைத் தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய பலம் என்றும் சொல்லலாம்; பலவீனம் என்றும் சொல்லலாம். அதனால் பெண்களே, உங்களுடைய புகைப்படத்தையோ அல்லது உங்களைப்பற்றிய ஒரு தகவலையோ சமூகவலைத்தளங்களில் அப்லோடு செய்வதற்கு முன்னால், இதைச் செய்தே ஆக வேண்டுமா என்று யோசியுங்கள்.

 

மொபைல் போனை பொறுத்தவரை டெலிஷனே கிடையாது. ஒரு தடவை ஒரு டேட்டாவை ஸ்டோர் செய்துவிட்டீர்களென்றால், அதை நீங்கள் டெலிட் செய்தாலும், எல்லா தகவல்களையும் மறுபடியும் எடுக்க முடியும். மொபைலில் இருந்து எப்போது வேண்டுமானாலும் ரெகவர் செய்துவிடலாம். முக்கியமாக, சைனீஸ் மற்றும் தைவான் தயாரிப்பான லோக்கல் மொபைல் போன்களில் உள்ள ஆபரேட்டிங் சிஸ்டம் வீக்கானது. அதில் இருக்கிற தகவல்களை வெகு சுலபமாக எடுத்து விடலாம்.

 

சட்டரீதியாகப் பார்த்தால்,  நம் நாட்டில் சட்டங்கள் கடுமையாக இருக்கின்றன. ஆனால், குற்றவாளிகளுக்குத் தண்டனை தருகிற விஷயத்தில் உறுதித்தன்மை இல்லை. ‘என்ன தப்பு செஞ்சாலும் என்னிக்காவது வெளில வந்துடலாம்’ என்கிற நிலைமையில்தான் நம் நாட்டின் நீதி பரிபாலனம் இருக்கிறது.

 

காவல்துறையை எடுத்துக்கொண்டால், ஒரு லெவலுக்கு மேல் இதை அவர்களால் கண்காணிக்க முடியாது. ஏனென்றால், தனிமனித உரிமையில் காவல்துறை தலையிடுவதாக ஆகி விடும்.  ‘என்னோட போன்; நான் என்ன வேணும்னாலும் செய்வேன்; என் போனை வேவு பார்க்கிறார்கள்’ என்று பொது மக்கள் கோபப்படுவதற்கான வாய்ப்பு இதில் அதிகம்” என்றவர், பேக் ஐ.டி.களை பெண்கள் எப்படிக் கண்டறியலாம் என்பதைச் சொல்ல ஆரம்பித்தார்.

 

”பேக் ஐ.டி.களை டெக்னாலஜி வழியாகக் கண்டுபிடிப்பது கடினம். ஆனால், அந்த புரொபைல் சரியானதா என்பதை கிராஸ் செக் செய்யலாம். புரொபைலில் இருக்கிற நபரின் பெயர் மற்றும் கல்லூரிப் பெயரை வைத்து, விசாரித்துப்பார்க்கலாம். அடுத்து, நீங்கள் பேக்  ஐ.டி. என்று சந்தேகப்படுகிற நபருடைய ரைட்டிங் ஸ்டைலை கவனிக்கலாம். அந்த புரொபைல் ஒரு கல்லூரி மாணவருடையது என்று அபவுட்டில் குறிப்பிட்டிருந்தால், ரைட்டிங் ஸ்டைல் இளைஞர்களுக்கு உரித்தானதாக இருக்கிறதா என்று செக் செய்யலாம்.

 

நீங்கள் சந்தேகப்படுகிற நபரின் பெயர், போன் நம்பர் மற்றும் பர்சனல் தகவல்களை ட்விட்டர், இன்ஸ்டா, கூகுள், லிங்க்டு இன் மற்றும் ட்ரூ காலரில் போட்டு தேடிப் பாருங்கள். அந்த நபர் சரியானவர் என்றால், அவரைப் பற்றிய தகவல்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கும். அப்படியில்லாத பட்சத்தில் அவர் பேக் ஐ.டி.யாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

 

என் அனுபவத்தில் இருந்து இன்னொரு வழியையும் சொல்லித் தருகிறேன். 40, 45 வயது ஆண்கள் 25 வயது பையன் என்று ஏமாற்றி, சில பெண்களிடம் பேசிக் கொண்டிருப்பார்கள். இப்படியொரு நபர் மீது உங்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டால், அவருடைய மெயில் ஐ.டி.யை வாங்கி ஒரு மெயில் செய்து பாருங்கள். அவனுடைய ரிப்ளையில் இருபதுகளில் இருக்கிற பையனுக்கான எஸ்.எம்.எஸ். மொழி இருக்காது.

 

அல்லது மிக மிகக் குறைச்சலாக இருக்கும். இந்த இடத்தில்  உஷாராகி விடுங்கள். இன்னொரு விஷயத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு ஆண் பேக் ஐ.டி. வைத்திருப்பது குற்றம் கிடையாது. இதற்காக ஒரு ஆணைக் கைது செய்யவும் முடியாது. ஆனால், இதை ஒரு பெண்ணை ஏமாற்றும் நோக்கத்துடன் வைத்திருந்தால்தான் அது தவறு” என்று தன் பேச்சை முடித்தார் புரொபசர் ராஜேந்திரன்.

 

-விகடன்

 

3 half

Leave A Reply

Your email address will not be published.