நீர் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக, மரங்களை நடுவோம்

0
1 full

நீர் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக, மரங்களை நடுவோம்

உலக தண்ணீர் தினவிழா புனித வளனார் கல்லூரியில்  கொண்டாடப்பட்டது

உலக தண்ணீர் தினவிழா புனித வளனார் கல்லூரியில்  5 ம் எண் (தநா) கடற்படை என்சிசி மூத்த பிரிவு,  1 Coy 2 ம் எண் (தநா) என்சிசி காலாட்படை  பிரிவு மற்றும் 2ம் எண்(தநா) ஆயுதப்படை பிரிவு என்சிசி ஆகியோரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 

2 full

விழாவின் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் முனைவர் பீட்டர் பாஸ்கல் ரெஜிஸ், முன்னாள் துணை முதல்வர் மற்றும் வேதியியல் இணை பேராசிரியர்  தலைமை தாங்கினார். 5 ம் எண் (தநா) கடற்படை என்சிசி மூத்த பிரிவு அதிகாரி வி பாஸ்டின் ஜெரோம் வரவேற்றார். 1 Coy 2 ம் (தநா) என்சிசி காலாட்படை  பிரிவு அதிகாரி ஆர்ம்ஸ்ட்ராங் அரசு சிறப்பு விருந்தினரை அறிமுகம்படுத்தினார். அவர் தனது உரையில் முக்கிய நீர் ஆதாரங்கள், தண்ணீர் இல்லாமை காரணமாக குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விவரிக்கிறார். 

தண்ணீர் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மற்றும் நீர் மேலாண்மை அமைப்பின் தற்போதைய நிலை, பாதுகாப்பான குடிநீர், நீர் நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் விவரித்தார்.

தண்ணீர் மாசுபாடு மற்றும் நல்ல ஆதார நீர் கிடைக்காமை, நீரைக் காப்பாற்றுவதற்குள்ள அச்சுறுத்தல்கள் இன்றைய சூழலில் அனுபவிக்கும் தண்ணீர் பற்றாக்குறை , தண்ணீர் பஞ்சம் குறித்து விளக்கினார். நமது பூமி 2/3 தண்ணீர் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது. மனித உடல் 70% தண்ணீரால் உள்ளடுக்கியது அது இல்லாமல் எந்த உயிரும் மண்ணில் வாழ்வது சாத்தியம் இல்லை என கூறினார். மேலும் அவர் நீர் மற்றும் நீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை உருவாக்கினார்.

நீர் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக, மரங்களை நடுவோம் மழை பெறுவோம் நீர் நிலைகளை உயர்த்துவோம் என கேட்டுக்கொண்டார். 2ம் எண்(தநா) ஆயுதப்படை பிரிவு என்சிசி அதிகாரி வில்சன் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் ஏறக்குறைய 160க்கும் மேற்பட்ட தேசிய மாணாக்கர் படை மாணவர்கள் பங்கேற்றனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.