ஏன் திமுக கூட்டணியை ஆதரிக்கவேண்டும் ?

0
D1

 

ஏன் திமுக கூட்டணியை ஆதரிக்கவேண்டும் ?

சட்டம் இயற்ற வேண்டியது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பணி. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் “தனி நபர் சட்டத்தை” கொண்டு வரலாம்.

D2

உதாரணதிற்கு, ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்க வேண்டும் என்று திருச்சி சிவா தனிநபர் சட்டத்தை கொண்டு வந்தார். இது, நாடாளுமன்றம் மற்றும் ராஜ்ஜிய சபாவில், நிறைவேறும் போது, அது தனி சட்டமாகிவிடும்.

N2

திமுகவுக்கு லோக்சபாவில் உறுப்பினர்கள் கிடையாது ; ராஜ்ஜிய சபாவில் 4 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் 5 தனி நபர் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

திருநங்கையர் மசோதா, பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, மரண தண்டனை ஒழிப்பு மசோதா மற்றும் தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா என்பன திமுக கொண்டு வந்துள்ள தனிநபர் சட்ட மசோதாக்களில் முக்கியமானவை.

அதே வேளையில்,அதிமுகவின் சார்பில் லோக்சபா மற்றும் ராஜ்ஜிய சபாவில், 50 எம்.பிக்கள் உள்ளனர். இந்த 50 எம்.பிக்களின் சார்பில் கொண்டு வரப்பட்ட தனி நபர் சட்டங்களின் எண்ணிக்கை “பூஜ்ஜியம்”.

ஆட்சியில் இல்லாத திமுக 5 தனிநபர் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. காரணம் மக்கள் மீதுள்ள அக்கறை. ஆட்சியில் இருக்கும் அதிமுக ஒன்றைக் கூட கொண்டு வரவில்லை.

ஹபிபுல்லா உபயதுல்லா

N3

Leave A Reply

Your email address will not be published.