உண்மையான திறமை மாணவர்களிடம் இருந்தால் சாதிக்கலாம்- மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா

0
Business trichy

மாவட்ட அளவிலான பேச்சு,கட்டுரை,ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பாராட்டு

புதுக்கோட்டை: மார்ச்.23 : புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் சார்பில் பெண் கல்வி,இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு உணர்த்தும் விதமாக நடைபெற்ற பேச்சு,ஓவியம் கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு அருள்மிகு பிரகதம்பாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவினை தொடங்கி வைத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேசியதாவது:ஒரு மாணவன் மாவட்ட அளவிலான போட்டியில் பரிசு பெறுகிறான் என்றால் அதற்கு மாணவன் மட்டும் காரணம் கிடையாது..அதற்கு மாணவனின் உழைப்பு,பெற்றோரின அறிவுரை,ஆசிரியரின் வழிகாட்டல் அனைத்தும் காரணமாக இருப்பதாலேயே மாணவன் பரிசு பெறுகிறான்.உண்மையான திறமை மாணவர்களிடம் இருந்தால் சாதிக்கலாம்.நமது தமிழக பள்ளிக் கல்வித்துறையானது மாணவர்களுக்கு கல்வியோடு அவர்களது தனித்திறமையை வளர்க்கும் வகையில் கலைத்திருவிழா,பேச்சு,கட்டுரை,ஓவியம் என பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது.எனவே மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களாகிய நீங்கள் உங்கள் பள்ளிக்கும்,பெற்றோருக்கும்,நம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

loan point

1 முதல் 3 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டியில் கொத்தமங்கலம் பள்ளி சுதர்ஷினி , முத்துப்பட்டினம் ரேகா ,மேலமுத்துடையான்பட்டி விக்னேஷ் 4 ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

nammalvar

4முதல் 5 வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வடசேரிபட்டி ரஞ்சித்குமார்,லெம்பலக்குடி சஞ்சனா,பொன்பேத்தி ஸ்ரீபா ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

1 முதல் 5 வரை நடைபெற்ற பேச்சு, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்பரிசு ரூ.3500, இரண்டாம் பரிசு ரூ3000, மூன்றாம் பரிசு 2500 ம் சான்றிதழும் வழங்கப்பட்டது.

web designer

6 முதல் 8 வரை நடைபெற்ற ஓவியப் போட்டியில் வலையன்வயல் ப.சுவேதா,ஆலத்தூர் க.கார்த்திகேயன்,வண்ணாரப்பட்டி ஆர்.கார்த்திகேயனும்,
பேச்சுப் போட்டியில் கோத்திராபட்டி கோ.பாண்டீஸ்வரி,பாலன்நகர் ஜெனட்மேரி,மைலன்கோன்பட்டி கிருபாஷினி ஆகியோரும்,கட்டுரைப் போட்டியில் மணல்மேல்குடி அல்ஜெசிரா பேகம்,டி.மேட்டுப்பட்டி சிலம்பரசன் ,வெங்களூர் கி.ராமாயி ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.இவர்களுக கு முதல்பரிசு 4000, இரண்டாம் பரிசு 3500, மூன்றாம் பரிசு 3000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வாகவாசல் கீர்த்திகா,கவரப்பட்டி ஐயப்பன்,ஆலங்குடி மீனாட்சி ஆகியோரும்,ஓவியப் போட்டியில் அரசர்குளம ஹரிராஜ் ,விராலிமலை ராஜப்பிரியா,அரையப்பட்னி பிரியதர்ஷன் ஆகியோரும்,கட்டுரைப் போட்டியில் மண்ணவேளாம்பட்டி தமிழன்,ரெகுநாதபுரம் அபர்ணா,கவரப்பட்டி நந்தினி ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.இவர்களுக்கு முதல் பரிசு ரூ.4500, இரண்டாம் பரிசு ரூ.4000, மூன்றாம் பரிசு ரூ.3500 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

அதே போல் ஒன்றிய அளவில் 9முதல் 12 ஆம் வகுப்பு வரை நடைபெற்ற ஓவியம்,பேச்சு,கட்டுரைப் போட்டியில் முதல் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.1500, இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.1300, மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ. 1100 என மொத்தம் 112 மாணவ,மாணவிகளுக்கு காசோலையும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பரிசு வழங்கிப் பாராட்டினார்..

விழாவில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,மாவட்ட உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன்,மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

போட்டிக்கான ஏற்பாடுகளைகல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சி.பன்னீர்செல்வம், இராஜா ,ஆவணப்படுத்துதல் அலுவலர் ஆ.ப.விஸ்வநாதம் ஆகியோர் செய்திருந்தனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.