தண்ணீர் சிக்கனமே தேவை இக்கனம்

0
1

தண்ணீர் சிக்கனமே தேவை இக்கனம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீர் அமைப்பு சார்பில் திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தண்ணீர் பற்றி விழிப்புணர்வு தினம் நடைப்பெற்றது.

2

உலக உயிர்களை வாழ வைக்கும் அமிர்தம் போன்றது நீர். கடந்த 1992ம் ஆண்டு ஜ.நா . சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் அனுசரிக்கபடுகிறது.

தண்ணீர் சிக்கனத்தை வழியுறுத்தியும், நீர் நிலைகளை பாதுகாப்போம், நீராதாரமே நமது வாழ்வாதாரம், ஆறுகள் நமது அடையாளம் ஆறுகள்மாசுபட்டால் அவமானம்…..   தண்ணீர் சிக்கனமே தேவை இக்கனம், நீர் நிலைகளை குப்பைத் தொட்டியாய் மாற்றாதீர்,   போன்ற வாசகங்கள் அடங்கி பாகைகளை பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

4

இதில் தண்ணீர் அமைப்பின் செயலாளர் கே.சி. நீலமேகம், நிர்வாகிகள் ஆசிரியர்கள் ஜெயந்தி, சந்திரா, அருணா , பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டார்கள்.

தண்ணீர் அமைப்பின் சார்பில் மதியம் 12.00மணிக்கு உலக   தண்ணீர் தின விழா பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தண்ணீர்அமைப்பின் செயலாளர் திரு.கே.சி நீலமேகம் தலைமை வகித்தார். தண்ணீர் அமைப்பின்    இணைச் செயலாளர் பேரா.கி.சதீஷ்குமார் சிறப்புரையாற்றினார். அவர்தம் சிறப்புரையில் உலகிற்கே நீரியல் மேலாண்மையும் நீர்ப்பாசன முறைகளையும் கற்றுத் தந்தவர்கள்  தமிழர்கள். நீரை மாரி என்று கொண்டாடியச் சமூகம் தமிழ்ச் சமூகம். நீர் நிலை குறித்த சொற்கள் தமிழில் பல உண்டு. நைல் நதி பாசனம் தொடங்குவதற்கு முன்னரே இங்கு நாம் கல்லணை கட்டி எழுப்பி பாசன முறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள்.

மாணவர்கள் நீர் நிலை பாதுகாப்பு குறித்து உறுதி மொழி எடுத்தனர்.

மழைப்பொழிவு நின்றாலும் குறைந்தாலும் மழை நீரை சேமித்து வருடம் முழுதும் குடிநீருக்காக பாசனத்திற்காக பயன்படுத்திடவே பல்வேறு வகையான நீர் நிலைகளை உருவாக்கி போற்றிப் பாதுகாத்தனர். வீட்டிற்கு ஒருவர் 10 வயது முதல் 80 வயது வரையில் அவரவர் ஊர் நீர்நிலைகளில் 6 க்கு 6 அடி வண்டல் மண் எடுத்து தூர் வாரும் முறையை பின்பற்றினர்.ஆனால் இன்று நீர் நிலைகளின் மிகவும் பரிதாப நிலையில் சிதைக்கப்பட்டு , ஆக்கிரமிக்கப்பட்டு, குப்பைகளின் மேடாக உள்ளது வேதனைமிகுந்தது. இந்த நிலை மாறிட நாம் விழிப்புணர்வு பெற வேண்டும். மறைநீர் குறித்து விழிப்புணர்வு பெற்று நீரைச் சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். ஆறுகள் உள்ளிட்டநீர் நிலைகளை சுரண்டுவதும் ஆக்கிரமிப்பதும் தூர்ப்பதும் வன் கொலைக்குச் சமமாகும்.வருங்கால தலைமுறை வளமாக வாழ்ந்திட பொன்னும் பொருளையும் சேமிப்பதை விட நிலத்தடி நீரை மழை நீரை இயற்கை வளங்களை சேமித்து பாதுகாத்தல் வேண்டும் என்றார்.

3

Leave A Reply

Your email address will not be published.