வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகரம், எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராப்பட்டியில் உள்ள R.S.காபி பாரில் வேலை செய்து வந்த ஷியாம்குமார் (36/19), த/பெ. R.S.சித்தார்த், எண் 41/7, காந்திநகர் 2வது குறுக்குத்தெரு, கிராப்பட்டி, திருச்சி என்பவரிடம் கடந்த 30.01.2019-ம் தேதி மாலை 1610 மணியளவில் மேற்படி கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த டீனு ஆனந்த், த/பெ.அன்பழகன், கதவு எண் 1/72, புதுத்தெரு, மலைப்பட்டி, ராம்ஜிநகர், திருச்சி என்பவர் மேற்படி ஷியாம்குமார் என்பவரிடம் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி மேற்படி கடையிலிருந்த பணப்பெட்டியிலிருந்து ரூ.700/- பணத்தை பறித்து சென்று விட்டதாக மேற்கண்ட ஷியாம்குமார் கடந்த 30.01.2019-ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய குற்ற எண் ; 56/19, U/s 392 r/w 397, 506(ii) IPC –ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கினை எடமலைப்பட்டி புதூர் காவல் ஆய்வாளர் அவர்கள் புலன் விசாரணை செய்து எதிரி டீனு ஆனந்த் என்பவரை கடந்த 31.01.2019 அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வழக்கின் எதிரியான டீனு ஆனந்த், த/பெ.அன்பழகன் என்பவர் மீது ஏற்கனவே வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் என எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளிலும், கே.கே.நகர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளிலும் மற்றும் அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் 1 வழக்கிலும் என மொத்தம் 8 வழக்குகளில் சம்மந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே, மேற்படி எதிரி தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் எடமலைப்பட்டி புதூர் (ச&ஒ) காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் மேற்படி டீனு ஆனந்த், த/பெ.அன்பழகன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையிட்டார்.

அதன் பேரில் இன்று 20.03.2019-ம் தேதி திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரி டீனு ஆனந்த், த/பெ.அன்பழகன் என்பவருக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட ஆணையினை எடமலைப்பட்டி புதூர் (ச&ஒ) காவல் ஆய்வாளர் சார்பு செய்தார்.
