திருச்சியில் களமிறங்கும் திருநாவுக்கரசர்.., நள்ளிரவில் வெளியிட பட்ட வேட்பாளர் பட்டியல்.

0
1

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை திமுக கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸ் எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. ஆனால் கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியான காங்கிரஸ் மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருந்தது.

2
4

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

  1. திருச்சி- திருநாவுக்கரசர்
  2. தேனி- ஈவிகேஎஸ் இளங்கோவன்
  3. கன்னியாகுமரி- வசந்தகுமார்
  4. கரூர்- ஜோதிமணி
  5. திருவள்ளூர்- கே. ஜெயக்குமார்
  6. ஆரணி- விஷ்ணு பிரசாத்
  7. விருதுநகர்- மாணிக்கம் தாகூர்
  8. கிருஷ்ணகிரி- செல்லக்குமார்
  9. புதுச்சேரி- வைத்திலிங்கம்

ஆனால், தற்போதுவரை சிவகங்கை தொகுதியில் வேட்பாளரை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 

3

Leave A Reply

Your email address will not be published.