கொடூர வெயிலை சமாளிக்க இதுல ஏதாவது ஒன்ன சாப்பிட்டாலே போதும்..!

0
D1

பல வித நோய்களில் இருந்து உங்களை காத்து கொள்ள சில வகையான உணவுகளே உதவும். நோய்களின் வீரியம் அதிகரிக்க தொடங்குவதற்கு முன்னரே அதை தடுப்பது மிக சிறந்த வழி. சில நோய்கள் பெரிய அளவில் நம்மை தாக்காது. ஆனால், ஒரு சில நோய்கள் விபரீத மாற்றங்களை நமது உடலில் உண்டாக்கி விடும். குறிப்பாக சூரியனிடம் இருந்து வருகின்ற புற ஊதா கதிர்களின் தாக்கத்தை கூறலாம். இது மிகவும் மோசமான பாதிப்பை உண்டாக்கும். புற ஊதா கதிர்களில் இருந்து உங்களை காக்க மிக எளிய வழி உணவு தான்.

சாப்பிடும் உணவை வைத்தே நம்மால் இந்த மோசமான கதிர்களில் இருந்து காத்து கொள்ள இயலும். இனி புற ஊதா கதிர்களில் இருந்து உங்களை காக்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை அறியலாம்.

தக்காளி

D2

லிகோபைன் என்கிற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தக்காளியில் அதிக அளவில் இருப்பதால் இவை சூரியனிடம் இருந்து வருகின்றன புற ஊதா கதிர்களை தடுத்து நிறுத்தி விடும். மேலும், தோலில் உண்டாக கூடிய புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு. ஆலிவ் எண்ணெய் வைட்டமின் ஈ, பாலிபீனால்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் அதிக அளவில் இருப்பதால் சூரியனின் தாக்குதலில் இருந்து உங்களை காத்து விடும். மற்ற எண்ணெய்களை பயன்படுத்துவதை விட ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் பல நன்மைகள் உண்டாகும்.

 

கிரீன் டீ

 

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் கொண்ட கிரீன் டீயை தினமும் குடித்து வந்தாலே பலவித நன்மைகள் நமக்கு உண்டாகும். முக்கியமாக புற்றுநோயின் பாதிப்பிலிருந்து தப்பிக்க கிரீன் டீ உதவும். அத்துடன் சூரியனின் பாதிப்பில் இருந்து தப்ப கிரீன் டீ மிக சிறந்த உணவாகும்.

 

கேரட்

 

கேரட்டினோய்ட்ஸ் அதிகம் கொண்ட உணவுகளில் கேரட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சருமத்தில் ஏற்பட கூடிய பாதிப்புகளை தடுக்க கேரட் அற்புத உணவாகும். அத்துடன் சூரிய ஒளியின் ஆக்ரோஷத்தை தடுக்கவும் கேரட் உதவும்.

 

சிட்ரஸ் வகை உணவுகள்

 

N2

எலுமிச்சை, ஆரஞ்சு, கிரேப் ப்ரூட் போன்றவை புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும். அத்துடன் இதில் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் புற ஊதா கதிர்களின் ஆபாயத்தில் இருந்து உங்களை காக்கும்.

 

வால்நட்ஸ்

 

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வால்நட்ஸில் அதிக அளவில் இருப்பதால் தோல் பாதிக்கப்படுவதை தடுக்கும். மேலும், செல்கள் சிதைவடைவதை தடுக்க வால்நட்ஸ் மிக சிறந்த உணவு பொருள். தினமும் கொஞ்சம் வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால் பலவித நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.

ப்ரோக்கோலி

உடலில் உண்டாக கூடிய வீக்கங்களை தடுக்க ப்ரோக்கோலி உதவுகிறது. இவற்றில் உள்ள sulphorane என்கிற மூல பொருள் புற்றுநோயின் அபாயத்தை தடுக்க உதவுகிறது. அவ்வப்போது இதனை சாப்பிட்டு வந்தால் செல்கள் பாதிக்கப்படுவதை மிக சுலபமாக தடுத்து விடலாம்.

 

மீன்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் மீனில் இருப்பதால் இவை உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவும். அத்துடன் புற ஊதா கதிர்களில் இருந்து நமது உடலை பாதுகாக்கும் அற்புத திறன் மீன் போன்ற கடல் உணவுகளுக்கு உண்டு. MOST READ: இதுல ஏதாவது ஒன்னு உங்க வீட்டுல இருந்தாலும் உங்களுக்கு ஆப்பு ரெடியா இருக்கும்!

 

ஜாக்கிரதை!

பெரும்பாலும் வெயிலில் செல்லும் போது மிகவும் அடர்ந்த நிற உடைகளை உடுத்தாதீர்கள். இது உடலுக்கு பேராபத்தை ஏற்படுத்தி விடும். மேலும், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இது போன்ற உணவுகளை தொடர்ந்து எடுத்து கொள்ளுங்கள். அப்போது தான் உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

source:tamil.boldsky.in

N3

Leave A Reply

Your email address will not be published.