கல்வி குடிமக்களை  மேம்படுத்துகிறது.

0
D1

கல்வி குடிமக்களை  மேம்படுத்துகிறது.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் 175-ஆம் ஆண்டினை விமரிசையாக கொண்டாடும் விதத்தில், இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த முக்கியவிடயங்களைச் சேகரித்து கலந்துரையாட வேண்டும். என்பதற்காக, ஒரு தேசிய அளவிலான விவாத அரங்கிணை “கல்வி குடிமக்களை மேம்படுத்துகிறது” என்கிற தலைப்பில் மார்ச்-20,21 ஆகிய தினங்களில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் நாடு முழுவதிலுமிருந்து தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடக, கேரளா, புதுச்சேரி போன்ற ஏனைய பகுதியில் உள்ள பிரபல உயர்கல்வி கல்வி நிலையங்களிலிருந்து 3 பேர் வீதம் 26 அணிகள் பங்குபெற்றன . இதில் முதல் நாளான மார்ச் -20 அன்று நடைப்பெற்ற சுற்றுகளில் ராஜஸ்தான் மாநிலத்தின்  எஸ்‌எஸ் ஜெயின் சுபோத்தா  கல்லூரி,மத்திய பிரதேசத்தின் செயின்ட் அலாய்சியஸ் கல்லூரி, சென்னையை சார்ந்த மெட்ராஸ் பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரி மற்றும் மதுரை பாத்திமா கல்லூரியும் இறுதி சுற்றுக்கு தேர்ச்சிபெற்றது.

D2
N2

இறுதிச்சுற்று மறுநாள் மார்ச் -21 அன்று கல்லூரி வளாகத்தில் லாலி அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்புவிருந்தினராக திருச்சி இந்திய மேலாண்மை நிறுவன இயக்குனர் முனைவர். பீமாரையா மெட்ரி  கலந்துக்கொண்டு உரையாற்றியபோது,  ‘கல்வி மனிதர்களின் ஒற்றுமைக்கு உதவ வேண்டும் என்றும், கல்வி மனிதர்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், கல்வி மனிதனை சிந்திக்க வைக்கும் அளவிற்கு அமைய வேண்டும் என்று கூறினார்’.

மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி அதிபர் தந்தை லியானார்டோ பெர்ணான்டோ, கல்லூரி செயலர் தந்தை ஆண்டனி பாப்புராஜ் மற்றும் கல்லூரி முதல்வர் அருட்தந்தை. ஆரோக்கியசாமி சேவியர் ஆகியோர் தலைமை தாங்கினார் . இந்நிகழ்ச்சியில் முதல் பரிசுக்கான காசோலை ரூ.50,000 யை மத்தியபிரதேசத்தின் செயிண்ட் அலாசியஸ் கல்லூரியும், இரண்டாம் பரிசுக்கான காசோலை ரூ.30,000 யை  சென்னை கிறிஸ்துவக் கல்லூரியும், மூன்றாம் பரிசுக்கான காசோலை ரூ.6000 யை ராஜஸ்தான் மாநிலத்தின் எஸ்‌எஸ் ஜெய்ன்  சுபோத்தா கல்லூரி, கர்நாடக மாநிலத்தின் செயின்ட் அலாய்சியஸ் கல்லூரி மற்றும் மதுரை பாத்திமா கல்லூரிகளும் பெற்றன.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை முனைவர் கில்பர்ட் கமிலஸ், முனைவர். ஜான் பாலையா மற்றும் திருமதி.ஜாஸ்மின் ஆகியோர் தலைமையிலான பேராசிரியர்களும் மாணவர்களும் செய்திருந்தனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.