உங்கள் காதுடைய வடிவத்தின் படி உங்களுக்குள் இருக்கும் அற்புத குணங்கள் என்னென்ன தெரியுமா?

0
gif 1

நமது முகத்திலேயே இருந்தாலும் பலரும் கவனிக்காத ஒரு உறுப்பு என்றால் அது காதுதான். அலங்காரம் செய்யும்போது கூட நாம் முகத்தில் இருக்கும் அனைத்திற்கும் அலங்காரம் செய்வோமோ தவிர காதுகளுக்கு எதுவுமில்லை. பெண்களாவது காதணி அணிவார்கள், ஆண்களை பொறுத்தவரையில் அதுவும் இல்லை. ஆனால் நம் உடலின் மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்று காதாகும்.

நமது செவிப்பறையின் முக்கிய வேலையே காதின் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருப்பதுதான்.மேலும் நமது முகத்தில் நரம்புகள் முடியும் ஒரே இடம் இதுதான். கடுமையான சூழ்நிலைகளில் இருந்து காதை பாதுகாப்பதும் இதன் கடமைதான். இதனால்தான் பண்டைய கால மக்களின் செவிப்பறையும், காதும் ஒரே அளவில் இருந்தது. காது நம்மை பாதுகாப்பது மட்டுமல்ல நமது குணாதியசங்களின் முகவரியாகவும் இருக்கிறது. காதின் வடிவத்தை வைத்தே ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

 

மனித பரிணாம வளர்ச்சி

gif 3

இன்றைய நவீன காலத்தில் மனிதர்களின் பரிணாம வளர்ச்சி காரணமாக அவர்களின் பல பாகங்களின் இருப்பும், அளவும் குறைந்து கொண்டே வருகிறது. அவ்வாறு அளவு குறைந்த பாகத்தில் முக்கியமானது காதுதான். ஒருவரை பார்க்கும்போதோ, ஏன் நமது பிம்பத்தை தண்ணீரில் பார்க்கும்போது கூட நாம் காதுகளின் வடிவத்தை கவனித்திருக்க மாட்டோம்.

 

சாமுத்திரிகா சாஸ்திரம்

நாம் இறக்கும் வரை நமது உடலில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கக்கூடிய ஒரே உறுப்பு நமது செவிப்பறைதான் என்று விஞ்ஞானம் கூறுகிறது. சாமுத்திரிகா சாஸ்திரத்தின் படி நமது காதின் வடிவத்திற்கும் நமது வாழ்க்கைக்கும், குணாதிசயங்களுக்கும் ஆளுமைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. வேதங்களில் கூறியுள்ளபடி காதுக்கும் ஆன்மாவிற்கும் கூட தொடர்புள்ளது.

 

இணைக்கப்பட்ட காது

இதுபோன்ற காது அமைப்புடைய மக்கள் காதுகளில் எந்தவித ஏற்ற இறக்கங்களும் இல்லாமல் நேரடியாக காதின் முடிவுடன் தொடர்பிருக்கும். இவர்கள் எப்பொழுதும் உற்சாகமாகவும், தனிப்பாதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சுயநலம் எப்பொழுதும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இவர்களின் புத்திக்கூர்மை இவர்களின் கூடுதல் பலமாகும்.

 

அகலமான காது

இவர்கள் பொதுவாக ஒரு அலட்சியமான மனோபாவத்தை கொண்டவர்கள். எந்தவொரு விஷயத்தையும் மிகவும் இலேசாக எடுத்துக்கொள்வதோடு அதனை எளிதாக கையாளுவார்கள். அவர்களை பற்றி எப்பொழுதும் அவர்கள் தீவிரமாக கவலைப்படமாட்டார்கள். இதுமட்டுமின்றி இவர்கள் பெரும்பாலும் அமைதியாகவும் தருணங்களை மற்றவர்களை விட அதிகம் அனுபவிப்பவராகவும் இருப்பார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் இவர்கள் மற்றவர்களை கிண்டல் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள்.

 

gif 4

குறுகிய காது

இந்த வடிவ காது கொண்டவர்கள் பொதுவாக தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்வார்கள், மேலும் அவர்கள் பற்றிய செய்திகளை அவர்களுக்குளே வைத்துக்கொள்வார்கள். பெரும்பாலும் அமைதியாகவே இருக்கும் இவர்கள் மிக அரிதான தருணங்களில் மிகவும் மூர்க்கமாக நடந்து கொள்வார்கள். புறம் பேசுவதோ, துரோகம் செய்வதோ இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் அதிகம் பேசாவிட்டாலும் இவர்களின் சிந்தனைகள் அதிகம் பேசும்.

 

கூரான காது

இவர்கள் அதிக புத்திக்கூர்மை மிக்கவர்களாகவும், அதிக குறும்பு செய்பவராகவும் இருப்பார்கள். தன்னை சுற்றி நடக்கும் அனைத்து செயல்களையும் நன்கு கவனித்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்வார்கள். அதேசமயம் மற்றவர்களை கவனிப்பதில் இவர்கள் அதிக ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். இந்த குணங்களால் இவர்கள் எதையும் துல்லியமாக செய்யக்கூடியவராக இருப்பார்கள். இவர்களுக்கென்று எந்த குறுக்கு வழியும் இருக்காது இவர்கள் நேராகவே எதனையும் சமாளிக்கும் திறன் கொண்டவர்கள்.

 

வட்டமான காது

இவர்களின் சிறந்த குணங்களே இவர்களின் நேர்மையும், இரக்கமும்தான். இவர்களின் நேர்மை இவர்களின் அர்ப்பணிப்பு தன்மையிலிருந்து வருவதாகும். இவர்களின் நம்பிக்கை இவர்களுக்கு நிறைய மதிப்புகளை பெற்றுக்கொடுக்கும். மற்றவர்களின் துயரங்களில் பங்கு கொண்டு அவர்களுக்கு முடிந்தளவு உதவி செய்யும் இவர்களின் குணம் இவர்களை எப்பொழுதும் சிறப்பானவர்களாக காட்டும். இவர்களை பொறுத்தவரையில் காட்டிக்கொடுப்பது, துரோகம் செய்வதை தவிர கொடிய செயல்கள் வேறு எதுவுமில்லை.

 

சதுர காது

இவர்கள் இந்த உலகின் மிகச்சிறந்த படைப்பாளிகளாக இருப்பார்கள். இந்த வடிவ காது இருப்பது மிகவும் அபூர்வமானதாகும். இவர்களின் எண்ணங்களும், செயல்களும் எப்போதும் பெரியதாகவும், தெளிவானதாகவும் இருக்கும். எனவே இவர்களுக்கு இடையே வரும் தடைகள் இவர்களுக்கு பெரிய பொருட்டாகவே இருக்காது. இவர்களுக்கான உலகத்தை இவர்களே உருவாக்கி கொள்வார்கள் அதில் வேறு எவரையும் அனுமதிக்க மாட்டார்கள். இவர்கள் யாரை மிகவும் முக்கியமானவர்கள் என்று கருதுகிறார்களோ அவர்களை மட்டுமே தங்கள் வட்டத்திற்குள் அனுமதிப்பார்கள்.

 

ஒட்டிகொண்டிக்கும் காது

இவர்கள் எப்போதும் கூட்டத்தில் தனியாக தெரிவார்கள், அதற்கு காரணம் அவர்களின் வித்தியாசமான செயல்களோ அல்லது வித்தியாசமான நடவடிக்கையாகவோ இருக்கும். இவர்கள் மற்றவர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை பார்க்கும் கோணம் எப்போதும் வித்தியசமானதாக இருக்கும், மேலும் அதனை இவர்கள் மற்றவர்களுக்கு விவரிக்கும் விதம் அனைவரையும் கவர்வதாக இருக்கும். அதேசமயம் இவர்களுடன் விவாதத்தில் ஈடுபடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று ஏனெனில் இவர்களின் எண்ணங்களை அனைவராலும் புரிந்து கொள்ள இயலாது.

source:tamil.boldsky.in

gif 2

Leave A Reply

Your email address will not be published.