100 % வாக்கு திருச்சியில் நூதன பிரச்சாரம்

0
Business trichy

தா.பேட்டை, மார்ச் 21: முசிறியில் நூறு சதவீதம் வாக்களிக்ககோரி அச்சடிக்கப்பட்ட துணிப்பையை வருவாய்துறை மற்றும் முசிறி பேரூராட்சி நிர்வாகம் இணைந்து பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்தமாதம் (ஏப்ரல்) 18ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் கட்சியினர் தங்கள் வாக்கு வங்கிகளை தக்க வைத்துக்கொள்ள தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலை சிறப்பாக நடத்தி முடிப்பதற்காக மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

MDMK

முசிறி வருவாய்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் முசிறி வாரசந்தையில் நேற்று காய்கறிகள் வாங்க வந்த பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நாள், தேர்தலில் நூறு சதவீதம் தவறாமல் வாக்களிப்போம் என அச்சிடப்பட்ட துணிப்பைகளை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் சுப்ரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், மண்டல துணை வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் வழங்கினர். அப்போது தேர்தல் அலுவலர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பிரசாரம் செய்தனர். வருவாய்துறை மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.