‘காசி யாத்திரை’ இரண்டாம் பாகத்தில் யோகி பாபு

0
1

46 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் இரண்டாம் பாகம்!
நடிகர் யோகி பாபுவுக்குத் தொடர்ந்து வாய்ப்பு மழை பொழிந்துவருகிறது. அதிலும், கதாநாயகனாக நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வருகின்றன. இந்நிலையில், வித்தியாசமான திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளார்.

மனிதன், மைனர் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.சி.குகநாதன் நீண்டகாலத்திற்குப் பின்னர் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி வருகிறார். இப்படத்தை புகழ்மணி இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

2
4

1973ஆம் ஆண்டில் வெளியான ‘காசி யாத்திரை’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்திற்கு குகநாதன் கதை எழுதியிருந்தார். எஸ்.பி.முத்துராமன் இப்படத்தை இயக்கியிருந்தார். வி.கே.ராமசாமி, சோ ராமசாமி, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், மனோரமா, டைப்பிஸ்ட் கோபு உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். நகைச்சுவை கதைக்களம் கொண்ட இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை 46 ஆண்டுகளுக்கு பின் உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். அதன் இரண்டாம் பாகமே காவி ஆவி நடுவுல தேவி.

காவி ஆவி நடுவுல தேவி திரைப்படத்தில் தற்கால நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, மனோபாலா, சிங்கமுத்து உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.