ராகுல் காந்திக்கு எல்லாம் தெரியுமா? தெரியாது. ஏன் ?

0
Business trichy

ராகுல் காந்திக்கு எல்லாம் தெரியுமா?  தெரியாது.

ராகுல் காந்தியால் எல்லா சிக்கலுக்கும் தீர்வு சொல்ல முடியுமா?
முடியாது.

ராகுல் காந்தியால் சடாலென இந்திய பொருளாதாரத்தினை நிமிர்த்த முடியுமா?
சாத்தியமில்லை.

Kavi furniture

பின்பு ஏன் ராகுல் காந்திக்கு வாக்களிக்க வேண்டும்?

ஏனென்றால்,

ராகுல் காந்தி போலி வாக்குறுதிகள் கொடுக்கவில்லை.

ராகுல் காந்தி தன்னை ஒரு சூப்பர்மேன் என்று சொல்லவில்லை.

ராகுல் காந்தி தான் ஒரு மேதாவி என்றும் எங்குமே பீற்றிக் கொள்ளவில்லை.

ராகுல் காந்தி ஐந்தே வருடங்களில் இந்தியாவை வல்லரசாக மாற்றுவேன் என்று பீலா விடவில்லை.

MDMK

மக்களோடு மக்களாய், சமூகத்தின் மனசாட்சியாய், தேசிய இனங்களின் பார்வைகளின் வழியே கருத்தினை உள்வாங்குபவராய், எவர் நம்பிக்கையையும் இகழாமல், தன்னுடைய பார்வையை தெளிவாக வைப்பவராய், முக்கியமாய், உரையாடலும், வாசிப்பும், கவனமாய் கேட்டலும், முடிந்தளவிற்கு நேர்மையாக பதில் சொல்வதையும் தான் செய்கிறார்.

மோடி தமிழ்நாட்டுக்கு வந்தாலும் இந்தியில் தான் பேசுவார். ராகுல் காந்தி தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பேசுகிறார். வண்கோம் சன்னெய் மாதிரியான போலித்தனங்கள் இல்லை. எனக்கும், உங்களுக்கும் தெரிந்த ஒரு மொழியில் நான் பேசுகிறேன். நாம் உரையாடலாம் என்கிறார்.

இதை விட ஒரு தலைவனுக்கான மேம்பட்ட தகுதி என்ன?

இந்திய ஒன்றியம் மாதிரியான ஒரு பன்முக தேசத்துக்கு தலைவனாக இருப்பதற்கான முதல் தகுதி வாய் அல்ல; காதும், மனதும்.

இந்த அடிப்படைகள் எதுவுமே தெரியாமல் இருப்பது தவறே இல்லை. அதை கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமும், வேட்கையும் இருந்தால் போதும். ஆனால் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும், எவர் பேச்சையும் கேட்க மாட்டேன் என்கிற ஆணவம் ஒரு தலைவனுக்கு அழகில்லை.

ராகுல் கேட்ட ஒரே ஒரு கேள்வி, செருப்படி “3000 பேர்கள் முன்னிலையில் என்னால் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும், மோடியால் முடியுமா”.

That sums up everything.

இந்த மனிதர் அதிகாரத்துக்கு வந்தால் நம்மால் கேள்வி கேட்க முடியும்.

கேள்வி கேட்பதை வரவேற்கும் ஒரு மனிதரை அதிகாரத்துக்கு கொண்டு வர வேண்டுமா?

அதிகார மமதையில், கேள்வி கேட்பவர்களை எல்லாம் anti-Indian, urban naxal, no indian blood, sikular என்று இகழ்ந்த ஆளுக்கு இன்னொரு வாய்ப்பு தர வேண்டுமா?

மக்கள் மன்றம் பதில் சொல்லட்டும்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.