உலக தண்ணீர் தின விழாவை முன்னிட்டு இசை வெளியீட்டு விழா.

0
Business trichy

உய்யக்கொண்டான் ஆற்றின் இசை வெளியீட்டு விழா

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் பிளாசம் சிறப்பு பள்ளியில் “இளங்கனல்” தொண்டு நிறுவனத்தின் 7 வது ஆண்டு விழாவும், உலக மகளிர் தின விழா மற்றும் உலக தண்ணீர் தின விழாவனது கொண்டாடப்பட்டது.

MDMK

இதில் வீரத்தமிழர்களின் நினைவுகளை எடுத்துரைக்கும் வகையில் பறையாட்டம், சிறந்த மங்கையருக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சுடர்ஒளி கலைக்கூடம் ராக் ராஜா வழங்கும், “விவாசாயி என்னும் மேடை” நாடக நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இளங்கனல் நிறுவனத்தின் தயாரிப்பினில் திருச்சியின் நகரினிலே பாய்ந்தோடும் உய்ய கொண்டான் ஆற்றின் சிறப்புகள் பற்றிய பாடலின் ஒலி குறுந்தகட்டை விழாவின் சிறப்புவிருந்தினரும், TPM நுண்கலை கல்லூரியின் நிறுவனர் இசைபேராசிரியர் S.M. தேவபாலன் வெளியிட்டார். அவர் அப்பாடலை பற்றி கூறுகையில் நம்மாவட்டத்தின் சிறப்புகளை மட்டுமல்லாமல் உய்யக்கொண்டான் ஆற்றின் பெருமைகளையும் விளக்கும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது என்றார். மேலும் இப்பாடல் திருச்சியில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொண்டுசெல்லவேண்டும் என்றார்.

Kavi furniture

மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக கலந்துக்கொண்ட, திருச்சி மறைவட்ட அதிபரும் பங்குதந்தையுமான அருட்தந்தை ஜோ. லாரன்ஸ் , திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி பிளாசம் சிறப்பு பள்ளி தலைமையாசிரியர் அருட்சகோதரி ஜோஸ்பின், சிட்டிசன் ஆப் உய்யகொண்டான் உறுப்பினரும் மற்றும் திருச்சி அரசுமருத்துவமனை முன்னாள் டீன் மருத்துவர் அனிதா மற்றும் காவேரி மகளிர் கல்லூரி வணிகவியல் துறை மற்றும் நுகர்வோர் அமைப்பின் பொறுப்பு உதவி பேராசிரியர் முனைவர். சரளா, ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை முனைவர். பிரேமா ஜோஸ்வா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கலந்துக்கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியை இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அந்தோனி ஜெய்கர், செயலர் அற்புத சகாயராஜ் ,பொருளாலர் ரஞ்சித்குமார், இயக்குநர் நிர்மலா ரஞ்சித், இளங்கனல் உறுப்பினர்கள் முரளிதரன், வெற்றி, யோகேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்து கொண்டுச்சென்றனர்.

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.