உங்கள் வாக்கு அன்பு சகோதரி கனிமொழிக்கே.. என பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளர்!

0
full

தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்து விளாத்திக்குளம் சட்டசபை அதிமுக வேட்பாளர் சின்னப்பன் சலசலப்பை ஏற்படுத்தினார்.

 

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய முஸ்லீம் லீக் கட்சி ஆகியன கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. அது போல் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளன. இந்த நிலையில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்..

 

ukr

என்ன, இப்படி சொல்லிட்டாரே வைகோ! அறிவிக்கவில்லை அது போல் பாஜக சார்பில் தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிடுவார் என தெரிகிறது. இதை எச் ராஜாவும் தலைமை கூறுவதற்கு முன் முந்திக் கொண்டு சொல்லிவிட்டார். எனினும் பாஜக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதிமுக வேட்பாளர் இதையடுத்து அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் கட்சிகள் பிரசாரத்தை செய்து வருகின்றன. அது போல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் சின்னப்பன் போட்டியிடுகிறார்.

 

poster

வாக்களியுங்கள் இவர் நேற்றைய தினம் தூத்துக்குடியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடன் தூத்துக்குடி லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அன்பிற்கினிய சகோதரி கனிமொழிக்கே உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் என கேட்டார். அதிமுக கூட்டணி உடனே கூட்டத்திலிருந்தவர்கள் சலசலப்பில் ஈடுபடவே பின்னர் சுதாரித்துக் கொண்ட சின்னப்பன், தூத்துக்குடியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழிசை சவுந்திரராஜனுக்கு வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டார்.

-ஒன் இந்தியா தமிழ்

 

half 1

Leave A Reply

Your email address will not be published.