தேர்தலுக்கான பிரசார பயணத்தைத் திருவாரூரில் இன்று காலை தொடங்கியுள்ளார் ஸ்டாலின்

0
Business trichy

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரசார பயணத்தைத் திருவாரூரில் இன்று காலை தொடங்கியுள்ளார்.

ஸ்டாலின்

Kavi furniture

தேர்தல் பிரச்சாரத்துக்காக நேற்று மாலை திருவாரூர் வந்த மு க ஸ்டாலின் இரவு தனது பாட்டியின் நினைவிடத்துக்குச் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் சன்னதி தெருவில் உள்ள தன் அத்தை வீட்டுக்கு வந்து தங்கினார்.

MDMK

இதைத் தொடர்ந்து இன்று காலை சன்னதி தெருவிலிருந்து புறப்பட்டு வாசன் நகர், திருவள்ளுவர் நகர், மருத பாடி, கீழ் வடம்போக்கித் தெரு, காந்தி நகர், நேதாஜி தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின் தி.மு.க கூட்டணியில் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ், திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பூண்டி கலைவாணன் ஆகியோருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்தனர். இளைஞர்கள் பலர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து திருவாரூரில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அலுவலகத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.