திருச்சியில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் அமமுக முக்கிய பிரமுகர் !

0
gif 1

திருச்சியில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் அமமுக முக்கிய பிரமுகர்

 

திருச்சி என்பது அரசியல்கட்சியானாலும் சரி, தனி நபர் சம்மந்தப்பட்ட விசயம் என்றாலும் எப்போதும் திருச்சியில் திருப்புமுனை ஏற்படுத்தும் என்பதும் எல்லோரும் அறிந்ததே ! .

 

அரசியல்கட்சிகளுக்கு சொல்லவே தேவையில்லை. புதிதாக துவங்கும் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் திருச்சியில் மையம் கொண்டு அரசியல் மாநாடு நடத்தியே ஆரம்பிப்பார்கள்.

 

gif 3

தினகரன் திருச்சியை நோக்கி கிளம்புவதற்கு முன்பு பத்திரிகைகளுக்கு ஒரு அறிவிப்பு கொடுத்துள்ளார். 

gif 4

அதில் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி அவப்பெயரும், களங்கமும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் வி.பி. கலைராஜனை நீக்குவதாக அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தவர் வி.பி. கலைராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. அமமுக அமைப்புச் செயலாளராக இருந்த சுகுமார் பாபு என்பவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக நியமித்துள்ளார்.

இந்த நிலையில் திருவாரூரில் எம்.பி.தேர்தலுக்கான முதல் பிராச்சாரத்தை ஆரம்பித்த ஸ்டாலின் இன்று திருச்சியில் தங்கி நாளை பெரம்பலூர் தொகுதிக்கான பிரச்சாரத்தை துவங்குவதற்காக திருச்சியில் தங்கியிருக்கார். அமுமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வி.பி. கலைராஜன் தி.மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைகிறார். புதிய கட்சியில் இணைவதற்கு திருச்சியை தேர்ந்தெடுத்திருக்கும் வி.பி.கலைராஜின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்றது போக போக தான் தெரியும்.

வி.பி.கலைராஜன் அதிமுகவில் இருந்த போது செந்தில்பாலாஜியின் அரசியல் வாழ்விற்கு விளக்கு ஏற்றி வைத்தர் என்பது குறிப்பிட தக்கது. குருவிற்கு சீஷியன் செய்யும் கடமையாக எண்ணியிருக்கலாம்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.