தனது தந்தை பிறந்த மண்ணிலிருந்து முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் ஸ்டாலின்

0
Business trichy

வீடு வீடாக ஸ்டாலின்
திருவாரூரில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 20) தொடங்கினார்.

மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (மார்ச் 20) தொடங்கியது. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் மார்ச் 17ஆம் தேதி ஒரே நாளில் வேட்பாளர்களை அறிவித்தனர். பின்னர் நேற்று ஒரே நாளில் அறிக்கையையும் வெளியிட்டனர். இந்நிலையில் திமுக தனது முதல் பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளது.

Kavi furniture

தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்று மாலை சென்னையிலிருந்து, திருவாரூர் கிளம்பிச் சென்ற ஸ்டாலின் இன்று (மார்ச் 20) காலை முதல் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார்.

MDMK

சன்னதி வீதி, கீழசன்னதி வீதி, வாசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பூண்டி கலைவாணன், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராஜ் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். வீதி வீதியாகப் பிரச்சாரம் செய்த அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் சிறுவர்கள் உட்படப் பலர் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, மணக்கால் அய்யம்பேட்டை பகுதியில் பெண்களுடன் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினார். அப்போது மகளிர் சுய உதவிக் குழுக்கள், பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, திருமண உதவித் தொகை என கலைஞர் ஆட்சியின் சாதனை குறித்துப் பட்டியலிட்ட ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்காக குறிப்பிடப்பட்ட சிறப்பம்சங்களையும் எடுத்துரைத்தார். தேர்தல் அறிக்கையில் சிறு குறு விவசாயிகளின் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தோம் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், அனைத்து விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் வகையில் அறிக்கையில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்தார். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர், திருக்காரவாசலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால் 15 ரூபாய் கூட வங்கிக் கணக்கில் போடவில்லை. ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகளை மோடி மறந்துவிட்டார் என்று தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சியில் தான் கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த ரூ.7000 கோடி வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்த அவர் திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு நல்ல காலம்தான் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

மீத்தேன் திட்டங்களால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்வதில்லை. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் மீத்தேன் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை திமுக வலியுறுத்தும் என்றார். எனவே, மக்களவைத் தேர்தலில் போட்டியிடக் கூடிய செல்வராஜுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும், இடைத்தேர்தலில் போட்டியிடக் கூடிய பூண்டி கலைவாணனுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, திருவாரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் திமுகவினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.