சின்னம் இல்லாமலே கலக்கும் திருச்சி சாருபாலா தொண்டைமான் !

0
Full Page

சின்னம் இல்லாமலே கலக்கும் திருச்சி சாருபாலா தொண்டைமான் !

 

திருச்சி எம்.பி. தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர் சாருபாலா ஆர். தொண்டைமான், சின்னம் இல்லாமலேயே தனது பிரசாரத்தை துவங்கி களத்தை பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார். 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. திருநாவுகரசரா ? லூயிஸ் அடைக்கலராஜா? நடிகை குஷ்பா என்கிற குழப்பம் இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கிறது.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக தர்மபுரியை சேர்ந்த டாக்டர் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார்.  வரும் முதல் கட்டமாக கூட்டணி கட்சிகளின் முக்கியஸ்தர்களை சந்தித்து முதல் ஆலோசனை கூட்டம் பெமினா ஓட்டலில் நடத்தினார்.

 

ஆனால்,  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், திருச்சி தொகுதியில் போட்டியிடும்  சாருபாலா ஆர். தொண்டைமான், தேர்தல் பணிகளைத் தொடங்கி, தொகுதியில் வலம் வந்து வாக்கு சேகரித்த வண்ணம் உள்ளார்.  மக்களிடம் இறங்கி சகஜமாக வாக்கு சேகரித்து வருகிறார். 

Half page

திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயிலில் காலை சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சாருபாலா தொண்டைமான் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கினார்.

 

ராக்கின்ஸ் சாலையிலுள்ள  உணவகங்கள், ஹோட்டல், தங்கும் விடுதி, தேநீரகங்கள்,  செல்லிடபேசி விற்பனையகங்கள்,  ஜவுளிக் கடைகள், இனிப்பகம் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்குள்ளும் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குகளைச் சேகரித்தார்.  சின்னம் ஒதுக்கப்படாததால், டிடிவி தினகரனின் புகைப்படத்தை கைகளில் ஏந்தியபடி சென்ற தொண்டர்கள்,  வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை. விடுத்தனர்.

இதை அடுத்து மாலை திருவரம்பூர், பொன்மலை, துவாக்குடி என பரப்பாக இயங்கி வருகிறார். சின்னத்தை பத்தி கவலை படாமல் ஏற்கனவே தொகுதியில் இருக்கும் அறிமுகம், இரண்டு முறை எம்.பி. தேர்தலில் போட்டியிட்டவர் என்கிற அனுபவத்தோடு சின்னம் இல்லாமே பிரசாரத்தில் கலக்கிக்கொண்டு இருக்கிறார். தேர்தல் ஓட்டப்பந்தையத்தில் தற்போது முந்தி ஒடிக்கொண்டிருப்பது சாருபாலா தொண்டைமான் என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பு இல்லை. 

இந்த பிரசாரத்தின்போது, அமமுக மாநகர் மாவட்டச் செயலர் ஜெ. சீனிவாசன், பகுதி செயலர்கள் சங்கர், தன்சிங், அவைத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், அமமுக தொண்டர்கள் பலரும் பங்கேற்று வாக்குகளைச் சேகரித்தனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.