“கருணாநிதி, ஜெயலலிதா இல்லாததால் வெற்றி உறுதி”

0
Full Page

இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தல் களம் கோடை வெப்பத்தையும் தாண்டி சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி நேற்று (19.3.2019) முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதையடுத்து நேற்று முதலாவதாக மிஸ்மில்லா மக்கள் கட்சியின் சுயேச்சை வேட்பாளர் அகமது ஷாஜஹான் தன் வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகிணியிடம் தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த ஷாஜஹானை சந்தித்துப் பேசினோம், “தமிழகத்திலேயே நான் தான் முதலாவதாக வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறேன். அதனால் நான் வெற்றி வேட்பாளர் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. நான் இத்தேர்தலோடு பத்தாவது முறையாக போட்டியிடுகிறேன். அப்போதெல்லாம் கருணாநிதி, ஜெயலலிதா இருந்ததால் என்னால் அதிக வாக்குகள் வாங்க முடியவில்லை. சுமார் 2,000 வாக்குகள் முதல் 8,000 வாக்குகள் வரைதான் வாங்க முடிந்தது.

Half page

ஆனால் தற்போது கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாததால் மக்கள் அனைவரும் எனக்கே ஓட்டுப் போடுவார்கள். நான் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விடுவேன். நான் வெற்றி பெற்றால் சேலத்தைச் சிங்கப்பூராக மாற்றுவேன். சேலம் நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் பொதுவுடைமை ஆக்கப்படும். ஒருவருக்கு ஒரு வீடு மட்டுமே வழங்கப்படும்.  மக்கள்  உழைப்பது, உண்பது, உறங்குவதாக இருப்பார்கள். இதனால் ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவேன்.

தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியின் ஏஜென்டாக செயல்படுகிறது. அரசியல் கட்சி வேட்பாளரையும், சுயேச்சை வேட்பாளர்களையும் பாரபட்சமாக நடத்துகிறது. அரசியல்கட்சிகளிடமும், சுயேச்சை வேட்பாளர்களிடமும் சமமாக 25,000 டெபாசிட் தொகை வாங்குகிறார்கள். ஆனால், அரசியல் கட்சிக்கு 50 ஆண்டுகளாக ஒரே சின்னத்தையும், சுயேச்சைகளுக்கு தேர்தலுக்கு 15 நாள்களுக்கு முன்பு எங்களுக்குச் சின்னம் ஒதுக்குகிறார்கள். சின்னத்தை எடுத்து விட்டு புகைப்படத்தை மட்டும் வைக்க வேண்டும். இதை நான் எம்.பி ஆனதும் செய்வேன்” என்று  சிரிக்காமல் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

-விகடன்

Quarter page

Leave A Reply

Your email address will not be published.