விவசாயத்தை விட்டு வெளியேற ஆலோசனை!

0

விவசாயத் துறையில் உள்ள துயரங்களுக்குத் தீர்வு காண, விவசாயிகள் வேறு துறைகளில் கவனம் செலுத்தலாம் என்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் மார்ச் 16ஆம் தேதி விவசாயிகளுக்கான பிரக்யான் – 19 நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்தியத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரான மாண்டெக் சிங் அலுவாலியா பேசுகையில், “விவசாயத் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண, குறிப்பிட்ட அளவிலான மக்களை அத்துறையிலிருந்து வெளியே கொண்டுவருவது அவசியாகும். விவசாயம் அல்லாத வேறு துறைகளில் அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

வேளாண் துறையின் வளர்ச்சி 8 சதவிகிதத்தைத் தாண்டாத வரையில் இத்துறையில் விவசாயிகள் காணும் துயரத்தைத் துடைக்க இயலாது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 33 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது.

food

ஆனால், இந்திய மக்கள் தொகையில் சுமார் 47 சதவிகிதத்தினர் வேளாண் துறையைச் சார்ந்தே இருக்கின்றனர். இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவிகித வளர்ச்சியையும், வேளாண் துறை உற்பத்தி 4 சதவிகித வளர்ச்சியையும் கொண்டுள்ளது. எனவே வேளாண் துறை உற்பத்தியின் வளர்ச்சி மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்க இயலாது.

எனவே, வேளாண் துறையிலிருந்து குறிப்பிட்ட அளவிலான விவசாயிகள் வெளியேறி, வேறு துறைகளில் ஈடுபட வேண்டும். அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை வழங்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.