லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் !

0
Full Page

லால்குடியில் சப்தரிஷீஸ்வரர் திருக்கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. மண்டல இணை ஆணையர் சுதர்சன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி என்னும் திருத்தவத்துறை அருள்மிகு பெருந்திருப்பிராட்டியர் உடனுறை அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் திருச்சி மண்டல இணை இயக்குனர் சுதர்சன் உதவி ஆணையர் ராணி ஆய்வாளர்கள் பிரேமலதா, ராதாகிருஷ்ணன் தக்கர்சோபியா லால்குடி கோட்டாட்சியர் பாலாஜி தாசில்தார் சத்தியபாலகங்காதரன் ஆகியோர்கள் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

Half page

லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜசேகர் காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர்கள் தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். விழாவில் லால்குடி, மணக்கால், நன்னிமங்கலம், கூகூர், ஆனந்திமேடு, திருமங்கலம், பூவாளுர், ஆங்கரை ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தேர்இழுத்தனர்.

விழா ஏற்பாடு 11.03.2019 அன்று கொடிஏற்றி இன்று 19-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இத்தேர் 75-அடி உயரமும்  22-அடி அகலமும் தமிழகத்தில் 2-ம் நிலையில் உள்ள தேர் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. பெரியதேரில் முன்னதாக விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, பெருந்திருப்பிராட்டியார் அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களை கொண்ட ஐந்து தேர்களில் முன்னதாக சென்றது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக செயல் அலுவலர் மனோகர் மற்றும் மேற்பார்வையாளர் குமரவேல் ஆகியோர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.