படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த தினகரன்

0
gif 1

மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை மார்ச் 17 காலை அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

தங்களுக்கு குக்கர் பொது சின்னம் கேட்டு அமமுக தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 25ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. மார்ச் 26ஆம் தேதிதான் வேட்பு மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள். இவ்வளவு நெருக்கடியில் தினகரன் தள்ளப்பட்டிருந்தாலும் ’25ஆம் தேதி குக்கர் கிடைக்கும். 26ஆம் தேதி வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுத் தாக்கல் செய்வார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார் தினகரன்.

gif 4


இந்த நிலையில் திமுக, அதிமுக அணிகளுக்கு முன்னதாகவே தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று காலை 8 மணிக்கு வெளியிட்டார். அதன்படி 24 மக்களவைத் தொகுதிகளுக்கும், 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் தினகரன்.
திருவள்ளூர் – பொன்.ராஜா (முன்னாள் எம்.எல்.ஏ.)
தென் சென்னை – டாக்டர் இசக்கி சுப்பையா (முன்னாள் அமைச்சர்)
ஸ்ரீபெரும்புதூர் – தாம்பரம் நாராயணன்
காஞ்சிபுரம் – முனுசாமி
விழுப்புரம் – வானூர் கணபதி
சேலம் – வீரபாண்டி செல்வம் ( முன்னாள் எம்.எல்.ஏ.)
நாமக்கல் – பி.பி. சாமிநாதன்
ஈரோடு – கே.சி.செந்தில்குமார்
திருப்பூர் – எஸ்.ஆர்.செல்வம்
நீலகிரி – எம்.ராமசாமி (ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி)
கோயம்புத்தூர் – அப்பாதுரை
பொள்ளாச்சி – முத்துக்குமார்
கரூர் – தங்கவேல்
திருச்சி – சாருபாலா தொண்டைமான் (முன்னாள் மேயர்)
பெரம்பலூர் – ராஜசேகரன்
சிதம்பரம் – டாக்டர் இளவரசன்
மயிலாடுதுறை – செந்தமிழன்
நாகப்பட்டினம் – டி.செங்கொடி
தஞ்சாவூர் – பேராசிரியர் முருகேசன்
சிவகங்கை – தேர்போகி பாண்டி
மதுரை – டேவிட் அண்ணாதுரை
ராமநாதபுரம் -வ.து. ஆனந்த்
தென்காசி – பொன்னுத்தாயி
திருநெல்வேலி – ஞான அருள் மணி
ஆகியோர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, மருத்துவர்கள், பேராசிரியர்கள், எம்பிஏ பட்டதாரிகள் என மெத்தப் படித்தவர்களையே வேட்பாளர்களாக அறிவித்திருகிறார் தினகரன்.

 

gif 3

முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன்.ராஜா, பெரம்பலூர் ராஜசேகரன், சேலம் எஸ்.கே.செல்வம் ஆகியோர் பட்டியலில் குறிப்பிடத்தக்கவர்கள். மதுரை தொகுதிக்கு முன்னாள் சபாநாயகரான காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். நாகப்பட்டினம் செல்வி செங்கொடி, தென்காசி பொன்னுத்தாயி ஆகிய இரு பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வ.து. ந. ஆனந்த் முன்னாள் அமைச்சர் வ.து. நடராஜனின் மகன் ஆவார்.
சட்டமன்றம்: தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கே வாய்ப்பு
சட்டமன்ற இடைத் தேர்தலில் முதல் கட்டமாக ஒன்பது தொகுதிகளுக்கு அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஏற்கனவே அதே தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்களாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள்தான்.

 

அந்த வகையில் பூவிருந்தவல்லி ஏழுமலை, பெரம்பூர் வெற்றிவேல், திருப்போரூர் கோதண்டபாணி, குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் பாலசுப்பிரமணி, அரூர் முருகன், மானாமதுரை மாரியப்பன் கென்னடி, சாத்தூர் சுப்பிரமணியன், பரமக்குடி டாக்டர் முத்தையா ஆகியோர் தத்தமது தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானதை ஒட்டி அக்கட்சியினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.