தூய்மை இந்தியா: 2 லிருந்து 39-வது இடத்திற்கு சென்ற திருச்சி

0
Business trichy

நகரத்தின் தூய்மை, திடக்கழிவு மேலாண்மை, நகரக்கழிவுகளை வெளியேற்ற முறையான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மற்றும் இணையத்தின் மூலம் நகரவாசிகளிடமிருந்து பெறப்படும் கருத்திகளின் அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் சார்பில் அகில இந்திய அளவில் தூய்மை நகரங்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருச்சி மாநகராட்சியானது இந்த வருடம் 39வது இடத்தையும் பிடித்துள்ளது.

 

தூய்மை நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாநகராட்சி முதலிடத்தையும், சத்தீஷ்கர் மாநிலம் அம்பிகாபூர் இரண்டாவது இடத்தையும், கர்நாடக மாநிலம் மைசூர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன பெற்று உள்ளன.


கடந்த 2016-ம் ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்திருந்த திருச்சி மாநகராட்சி, 2017-ம் ஆண்டு மூன்றாம் இடத்தையும், கடந்த ஆண்டு 13-வது இடத்தையும் பிடித்தது. இந்நிலையில், இந்தாண்டு 5 ஆயிரம் மதிப்பெண்ணுக்கு 3,414 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று 39வது இடத்திற்கு சென்றுள்ளது.
முதலிடம் பிடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு தூய்மை இந்தியா திட்டத்தில் வாக்களிக்கும் வகையில் அனைத்துவீடுகளிலும் இணைய முகவரிகள் ஒட்டப்பட்டது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியே வாங்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டித்திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பலகோடி வரையில் செலவு செய்யப்பட்டன. இருப்பினும் தூய்மை இந்தியா திட்டத்தில் தொடர்ந்து பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறது. அதுவும், இந்த வரும் மிகவும் பின்னுக்கு சென்று 39வது இடத்தை பிடித்திருப்பது திருச்சி வாசிகளிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மக்களின் கருத்து என்பதை பார்ப்போம்…

 

Kavi furniture

தமிழ்ச்செல்வி, ஸ்ரீரங்கம்.

எங்கள் பகுதி சாக்கடையில் உள்ள குப்பைகளை அள்ளி ரோட்டில் கொட்டினார்கள் மாநகராட்சி ஊழியர்கள். பின்னர் அதனை அல்லவே இல்லை நாங்கள் பலமுறை புகார் கொடுத்தும் பயனில்லை. குப்பைத் தொட்டிகள் இல்லாதது பல இன்னல்களையும் சந்தித்து வருகின்றோம். வீட்டில் நிகழ்ச்சிகள் வைத்தால் இலைகளை அகற்ற இடமின்றி தவித்து வருகிறோம். முன்பும் சரி, இப்போதும் சரி, திருச்சி மாநகரம் தூய்மையாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. திருச்சியை பொருத்தவரை மக்கள் அனைவருமே மக்கும் குப்பைகளையும், மக்காத குப்பைகளையும், தரம் பிரித்து தருகின்றோம். அப்படி இருந்தும் எப்படி 39 ஆவது இடத்திற்கு சென்றது? அப்போது எங்கே தவறுகள் உள்ளன? மாநகராட்சியின் மீதே தவறுகள் உள்ளன. புகார்களை தந்தால் நடவடிக்கைகளை எடுக்காது மெத்தனம் போக்கினை தொடர்ந்து காட்டி வருவதன் காரணமாகவே திருச்சி 39 ஆவது இடத்திற்கு சென்று விட்டது. மீண்டும் முதலிடத்திற்கு வரவேண்டுமென்றால் புகார் மனுவின் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 

சௌந்தர்யா, கல்லூரி மாணவி

தேர்தல் வரும் சமயத்தில் மட்டுமே அதிகாரிகளும், ஆட்சியாளர்களும், தங்களின் பணிகளை செய்கின்றார்கள். ஓட்டு கேட்க வரும் நபர்கள் நான் வெற்றி பெற்றால் இதை செய்வேன்,அதை செய்வேன், என்கின்றார்கள். நாம் அதனை நம்பி வாக்களிக்கிறோம். ஆனால் அவர்கள் எதையும் செய்வதில்லை. இதையெல்லாம் செய்யுங்கள் நாங்கள் வாக்களிக்கிறோம் என்று மக்கள் கூற வேண்டும்.

என்.ரங்கநாதன், ஸ்ரீரங்கம்.

MDMK

மக்கள் பிரித்துக் கொடுப்பதில் மிகவும் சிரமப்படுகின்றார்கள். குப்பை அள்ளும் ஊழியர்கள் சிலர் பணம் கேட்கின்றார்கள். பணம் தரும் வீட்டின் குப்பைகளை மட்டுமே அள்ளி செல்கின்றார்கள். மக்கும் குப்பை,மக்காத குப்பைகளை, பிரித்து தருவது நல்ல விஷயம் என்றாலும் அவைகளை மக்களால் செய்ய முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அதனால் சிலர் குப்பைகளை தெருக்களில் கொட்டி விடுகின்றார்கள். அந்த குப்பைகள் சேர்ந்து விடுகின்றன. மக்களின் மீதும் தவறுகள் இருந்தாலும் முன்பு போல் குப்பைத்தொட்டிகள் இருந்தால் பிரச்சனைகள் இல்லை. ஊழியர்களும் சரிவர வருவதில்லை வீட்டில் குப்பைகள் தேங்கி விடுகின்றன. புகார் கொடுத்தால் அதனை வாங்கிப் படிப்பது கூட கிடையாது.

 

பூபதி, புத்தூர்.

முதலிடம், இரண்டாம் இடம், என்று ஒரு ரேட்டிங் பின்னாடி சென்று கொண்டிருக்கிறது மாநகராட்சி. ஆரம்பத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒரு அட்டையினை வழங்கி அதில் குப்பைகளை தரம் பிரிக்கும் பெற்றோர்களிடம் கையெழுத்தினை பெற்று ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த நடைமுறை உண்மையாகவே பாராட்டத்தக்க கூடியதாக இருந்தது. ஆனால் அது ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை.
திருச்சி 39 வது இடத்திற்கு வந்ததற்கு இதுவும் ஒரு காரணம். எங்கள் வீடு புத்தூரில் உள்ளது தெருக்களில் குப்பைகள் இருந்தால் அதனை உடனடியாக மாநகராட்சிக்கு தகவல்களை தருவேன். ஆனால் நடவடிக்கை இருக்காது இது இரண்டாவது காரணம்.

அய்யாரப்பன், சமூக ஆர்வலர்

தூய்மை இந்தியா பட்டியலில் திருச்சி 39வது இடத்திற்கு சென்றமைக்கு நிர்வாக திறமையின்மையே காரணம். ஊழியர்கள் முறையாக பணி செய்கீறார்களா, புகார் மீது உடனே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா என்பதை முறையாக கவனிக்கவேண்டும். இவையனைத்தையும் தாண்டி வருடவருடம் பாதாளசக்கடைக்கு என்று நிதி ஒதுக்குகிறார்களே தவிர அதற்கான ஒரு முன்னேற்றம் கூட இல்லை. திருச்சியின் கழிவுகள் வெளியேறுவதற்கு முறையான பாதாளசாக்கடை உள்ளதா. பின்பு எப்படி தூய்மை இந்தியா பட்டியலில் முதல் இடம் குறித்து நாம் யோசிக்கமுடியும். முதலில் கழிவுநீர்களை வெளியேற்ற திட்டம் போடவேண்டும்.

 

சார்லஸ், காங்கிரஸ் கட்சி நிர்வாகி.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் மழைநீர் வடிகால பயன்படுத்தப்படு வந்த இப்போ பாதாள சாக்கடையாக பயன்படுத்தராங்க… அதையும் உய்யங்கொண்டான்ல கலந்து அதை சாக்கடை வாய்காளகவே மாத்திட்டாங்க… திருச்சி மாவட்டத்தின் முக்கியமான வாய்களே சாக்கடையா போன அப்போற எங்கிருந்து தூய்மை பட்டியலில் வரது.
ஸ்மார்ட் சிட்டிங்கர பேர்ல பல கோடி செலவு செய்யராங்க… ஆனா, குப்பைய வைக்க தொட்டிகள் இல்லாம பல இடங்கள் இருக்கு அதைபற்றி கண்டு கொள்ளவே மாட்டேங்கராங்க… புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை. தூய்மை இந்தியா தேர்வில் மக்களும் வாக்களித்துள்ளார்களே.
அப்படியென்றால் மக்களுக்கு இந்த மாநகராட்சியின் மீது அதிர்ப்தி உள்ளது என்று தானே அர்த்தம். முதலில் மக்களின் கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுத்து அவங்க வேலைய ஒழுங்க செய்தாலே போது தூய்மை இந்தியா திட்டத்துட முதல் இடத்திற்கு வந்து விடலாம்.
அதேபோல் இந்த ஸ்மார்ட் சிட்டிங்கர பேர்ல பணத்தை வீணா செலவு செய்யமால் பாதாளசாக்கடை போட செலவு செய்யவேண்டும்.

தொகுப்பு : ஜொல்னா ரெங்கா, ச.பாரத்

Pranav city

Leave A Reply

Your email address will not be published.