சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை திருச்சி தேமுதிக வேட்பாளர் சிறப்பு பேட்டி

0
Business trichy

நாடாளுமன்ற தேர்தலுக்குக்கு இன்னும் ஒரு மாதகாலமே உள்ள நிலையில், தமிழக முழுவதிலும் கட்சி கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பு என அரசியல் பரபரப்பிற்கு குறையே இல்லாமல் உள்ளது. திருச்சி தொகுதியை பொருத்தவரையில் அதிமுக தலையிலான அணியில் தேமுதிகவும், திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என அறிவித்து தேர்தல் பணிகள் மும்பரமாக செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில், தர்மபுயில் கடந்த 2009ம் ஆண்டு தேமுதிக சார்பில் நாடாளுமன்ற தேர்தலிலும், மக்கள் நலக்கூட்டணியில் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்ட மருத்துவர் தர்மபுரி இளங்கோவன், தேமுதிகவின் திருச்சி வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.

இதைத்தொடர்ந்து, நம்ம திருச்சி சார்பில் அவருடனான சிறப்பு பேட்டியில்,
”நான் அரசியலில் சம்பாதிக்கவேண்டும் என்று வரவில்லை. என்னுடைய மகன் மற்றும் மகளுக்கு கல்யாணம் செய்து வைத்து பேரக்குழந்தைகளும் பிறந்து விட்டன. 60 வயதுக்கு மேலான நான் இனி, பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடனே அரசியலுக்கு வந்தேன். லஞ்சம், ஊழல் இல்லாத அரசியல் செய்யவேண்டும் என்ற எண்ணத்திலே கேப்டன் தலைமையிலான தேமுதிகவில் சேர்ந்தேன்.” என்று கூறியவரிடம் தொடர்ந்து பேசுகையில்,

loan point

தர்மபுரியில் இருந்து திருச்சி தொகுதியில் வேட்பாளராக வருவதற்கான காரணம் என்ன? வெற்றி வாய்ப்பு எந்த அளவிற்கு இருக்கும் என நம்புகிறீர்கள்?

nammalvar

நான் இந்தியன். இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானலும் போட்டியிடலாம். வேட்பாளர்களுக்காக இங்கு யாரும் வாக்களிப்பதில்லை. கட்சியின் தலைவரைப்பார்த்தே வாக்களிக்கின்றனர். அதேபோல், எத்தனைபேர் திருநாவுக்கரசர், சாருபாலாவிற்கு வாக்களிக்கப்போகிறார்கள். அவர்களின் கட்சிக்கும், தலைவர்களையும் நம்பித்தான் வாக்களிப்பார்கள்.

திருச்சி அதிமுகவினருக்கிடையே இருக்கும் கோஷ்டி பூசலில் உங்களுக்கான தேர்தல் பணியினை முழுமையாக செய்வார்கள் என நினைக்கிறீர்களா?

web designer

குடும்பத்தில் பிரச்சனை வருவது இயல்பே. ஆனால், தேர்தல் வந்துவிட்டால் அதிமுகவின் வெற்றிக்கான அவர்கள் நிச்சயம் உழைப்பார்கள். அவர்கள் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு போராடி வெற்றி ஈட்டுபவர்கள்.

திருச்சி நேருவின் கோட்டையாக
கருதப்படும் நிலையில்
உங்களுக்கான வெற்றி வியூகங்கள் எப்படிப்பட்டது?

நான் முன்பே கூறியது போலா, நான் தனியாக நின்றால் 1,000 வாக்குகள் வரும் என்றார், நேரு நின்றார் 2,000 வாக்குகள் வரை வரலாமே தவிர, தனிப்பட்ட நபரைப்பார்த்து யாரும் வாக்களிப்பதில்லை. கட்சி, தலைவர்களே இதில் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். தர்மபுரியை பொருத்தவரையில் பாமகவிற்கே செல்வாக்கு அதிகம். இருப்பினும் நான் 18,000வாக்குகளை கடந்த தேர்தலில் பெற்றேன். காரணம், கேப்டனின் தலைமையிலான தேமுதிகவே. தற்போதைய தேர்தல்யுத்தம் என்பது ராகுலுக்கும், மோடிக்குமாதே தவிர வேறுயாருக்கும் இல்லை.

திருச்சி மக்கள் பிரச்சனைகள், கோரிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள உங்களின் திட்டம்?

அதற்காக குழு அமைத்து முழு அளவில் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தொடர்ந்து, நேரடியாக மக்களை சந்தித்து பிரச்சனைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிவேன். வெற்றிபெற்றதும் நிச்சயம் இவையனைத்தையும் சரிசெய்ய பாடுபடுவேன்.

– பாரத்

IAS academy

Leave A Reply

Your email address will not be published.