தஞ்சையில்  பதட்டம்  நிலவும் 13 ஓட்டுச்சாவடிகள்

0

தஞ்சையில்  பதட்டம்  நிலவும் 13 ஓட்டுச்சாவடிகள்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், தாலுக்கா அலுவலகத்தில் சமீபத்தில் தேர்தல் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் திருவிடைமருதூர் தொகுதி தேர்தல் உதவி அலுவலர் ஜெயபாரதி, தாசில்தார் சிவக்குமார், தேர்தல் உதவி அலுவலர் ராஜேஸ்வரி, தேர்தல் பறக்கும் படையினர் வெங்கடாச்சலம், குமார், மனோகர், ராஜி, டி..எஸ்.பி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருவிடைமருதூர் தொகுதி தேர்தல் உதவி அலுவலர் ஜெயபாரதி தலைமைவகித்து பேசினார். அதில் அவர் கூறுகையில்    பேசியபோது,’தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் விரைவாக நடந்துக்கொண்டிருக்கிறது.

தேர்தல் நடத்தை விதிகளின் படி வாகனத்தில் 50 ஆயிரத்திற்கும் மேலாக பணம் கொண்டுச்செல்பவர்கள் உரிய ஆவணங்களை இல்லாமல் கொண்டுச்சென்றால் உடனடியாக நடவடிக்கை மேற்க்கொள்ளபடும் என்றும், அவசரம் என்று கூறிச்செல்லும் வண்டிகளான ஆம்புலன்ஸ், கொரியார் ,போன்றவைகளை தவறாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இதுப்போன்ற செயல்களில் ஈடுப்படுபவர்களை பறக்கும்படை பிரிவினர் மிகக் கவனமாக கண்காணிக்க வேண்டுமெனக்கூறினார்.

13 ஓட்டுச்சாவடிகள் பதட்டம்,

இதுக்குறித்து தேர்தல் உதவி அலுவலர் ஜெயபாரதி கூறுகையில் மயிலாடுதுறை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதியில் மொத்தம் 291 ஓட்டு மையங்கள் உள்ளன. இதில் 13 மையங்கள் பதட்டமானவைகள் என கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக  கூடுதலான பாதுக்காப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கண்காணிக்கும் வகையில் மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.