மனைவி கழுத்து அறுத்துக்கொலை.. சந்தேக கணவன் திருச்சி போலீசில் சரண்

மனைவி கழுத்து அறுத்துக்கொலை.. சந்தேக கணவன் திருச்சி போலீசில் சரண்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த வடக்கு ஈச்சம்பட்டி கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் (39). இவரது மனைவி மகாலட்சுமி (36). கடந்த 2 ஆண்டுகாலமாக வெளிநாட்டில் வேலை பார்த்த பாலச்சந்தர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். தான் அனுப்பிய பணம் எங்கே? என கேட்டு சண்டை போட்ட பாலச்சந்தருக்கு தனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகமும் இருந்தது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் 2 குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த மகாலட்சுமியின் கழுத்தை அறுத்து விட்டு பாலச்சந்திர் ஓடி விட்டார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் காலை 8 மணியளவில் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் பாலசந்தர் சரண் அடைந்தார்.
