மன்னார்குடிக்கு மகாத்மா காந்தி வருகை புரிந்ததன் நினைவாக சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

0
Business trichy

மன்னார்குடிக்கு மகாத்மா காந்தி வருகை புரிந்ததன் நினைவாக சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

MDMK

மகாத்மா காந்தி 150 வது பிறந்த தின ஆண்டை முன்னிட்டு மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். அஞ்சல் துறை சார்பில் மகாத்மா காந்தி வருகை புரிந்த இடம் பிற முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டு வருகிறார்கள் அவ்வகையில் மகாத்மா காந்தி மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்த நினைவார்த்தமாக சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் அம்பேஷ்உப்மன்யூ சிறப்பு அஞ்சல் உறையினை வெளியிட தேசிய மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் சேதுராமன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் தேசிய மேல்நிலைப்பள்ளி கமிட்டி தலைவர் ராமநாதன், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.