தஞ்சையில் பரபரப்பு ஒரே நாளில் 38 ரவுடிகள் கைது.

0
1

தஞ்சையில் பரபரப்பு ஒரே நாளில் 38 ரவுடிகள் கைது.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே போலீசார் ஒரே நாளில் 38  ரவுடிகளை கைது செய்திருக்கும் நடவடிக்கையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2

தேர்தல் முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அதில் ஒன்று தான் தேர்தல் எந்த வித இடையூறுமின்றி நடைப்பெருவதற்கு காவல்நிலையங்களில் முக்கியமாக அதிக புகார்களின் பேரின் உள்ள ரவுடிகளை தேர்தல் முடியும் வரை கைது  செய்து வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

4

இதனடிப்படையில் நேற்று மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவிடைமருதூர் காவல் துணைக்கோட்டத்தில் உள்ள 5 காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த 38 பேரை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பாக அரசு அனுமதிப்பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது.

இதில் திருவிடைமருதூர் காவல் நிலைய அறிக்கையின் படி அரசு அனுமதிப்பெற்று துப்பாக்கிகள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 26 , இதில் இதுவரை 20 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ள நபர்கள் இன்னும் இரண்டு நாட்களில் துப்பாக்கியினை காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையெனில் அவர்களுடைய லைசென்ஸ் தடைசெய்யப்பட்டு துப்பாக்கிகள் கைப்பற்றபடும் என்று திருவிடைமருதூர் காவல்துறை டி.எஸ்.பி ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.