சிறுநீரகம் தானம் செய்தவர்களை கெளரவப்படுத்திய திருச்சி அப்போலோ மருத்துவமனை

0

 

அப்போலோ மருத்துவமனை சார்பாக திருச்சியில் நேற்று உலக சிறுநீரக தினம் கொண்டாடப்பட்டது .ஒவ்வொரு வருடமும் உலக சிறுநீரக தினம் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமையன்று கொண்டாடப்படும். “இந்தாண்டு எல்லோருக்கும் எல்லா இடங்களிலும்” சிறுநீரக ஆரோக்கியம் என்ற அடிப்படை கருத்தை கொண்டு கொண்டாடப்படுகிறது .ஒவ்விரு ஆண்டும் சுமார்   எட்டு லட்சம் பேர் நிரந்தர  சிறுநீரக நோயால் பாதிக்க படுகின்றனர் .. இதில் பத்து சதவிகிதம் மக்கள் சிகிச்சை மேற்கொள்கின்றனர் .மேலும் அவர்களில் ஒன்று முதல் இரண்டு சதவிகித மக்கள் மட்டும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள படுகிறது. இதில் சிறுநீரக நோய் குறித்தும் அது வராமல் தடுப்பது பற்றியும் மேலும் உணவு முறைகள் குறித்தும் கருத்து வலியுறுத்தப்பட்டது.

இவ்விழாவில் முதன்மை சிறுநீரக சிறப்பு மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சு. வேல் அரவிந்த் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அழகப்பன், டாக்டர் எல்.மகேந்திரவர்மன் ஆகியோர் பங்கு பெற்றனர் . மேலும் மருத்துவ மனையின் துணை மருத்துவ சேவை இயக்குனர் டாக்டர் செந்தில் குமார்  வரவேற்புரை உரையாற்றினார் மற்றும் டாக்டர் எல்.மகேந்திரவர்மன் நிறைவுரை நிகழ்த்தினார். இதில் சிறுநீரக நோய் பாதிக்க பட்டவர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் பங்கு பெற்று பயன்  பெற்றனர், இத்துடன் சிறுநீரகம் தானம் செய்தவர்களுக்கு கெளரவப்படுத்தப்பட்டது.

 

food

அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் நிறுவனரும் / தலைவருமாகிய மருத்துவர் பிரதாப் சி ரெட்டி றிக்கோள் வாசகத்திற்கேற்ப, திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை “தொற்று நோய்” (NCD) ஒழிப்பு சம்பந்தமாக தொடர்ந்து இயங்கி வருகிறது.

 

இம்மருத்துவமனையில் 50 இக்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது, சிறுநீரகம் தானம் செய்தவர்களை கெளரவப்படுத்தி சான்றிதழ் வழங்கப்பட்டது. இம்மருத்துவமனையின் சிறப்பம்சமாக திருச்சி மாவட்டத்தில் முதன்முறையாக நுண்துளை (Laparoscopic) முறையில் தானம் செய்பவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இம்முறையில் அறுவைசிகிச்சை மேற்கொள்வதால் உறுப்பு தானம் மேற்கொள்பவரின் மருத்துவமனை இருப்பு குறைக்கப்பட்டு, விரைவில் வீடு திரும்ப நேரிடுகிறது.

 

சிறுநீரக பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால் மருந்து மாத்திரையிலேயே குணப்படுத்தி விடலாம். ஆனால் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக வலியும், தொந்தரவு எதுவும் நோயாளிக்குத் தெரியாது என்பதால் அதனை ஆரம்ப நிலையில் கண்டு பிடிப்பது மிக கஷ்டம். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு என மருத்துவரிடம் சென்றால் அவரும் சிறுநீரக பரிசோதனை செய்ய சொல்வதில்லை. முழுதுமாக சிறுநீரகம் செயல் இழந்தப் பின்னரே சிறுநீரக நிபுணரிடம் (Nephrologist) போகிறார்கள்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.