திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சியில் ஒரே
குடும்பத்தை சேர்ந்த மூன்று தூக்கிட்டு தற்கொலை.
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம் விசாரணையின் படி திருச்சி செந்தண்ணீர்புரம் பாரி தெருவில் வசித்து வருபவர் சகாயராஜ்(46), ஆட்டோ ஓட்டுனராக இவருக்கு நந்தகுமார்(21), முத்துலட்சுமி(25) (நர்சிங் படிப்பு படித்துள்ளார்.) ஒரு மகன் , மகள் இருந்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சகாயராஜ் மகன் நந்தகுமார் உடல்நலக்குறைவின்றி இறந்துப்போனதால் பெரிதும் மனஉடைச்சலுக்கு சகாயராஜ் குடும்பத்தினர் ஆளாகினர். சம்பவத் தன்று மார்ச் 13 அன்று மாலை சகாயராஜ் குடி இருக்கும் வீட்டு உரிமையாளர் விஜயலெட்சுமி வாடகை பணம் பெறுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். யாரும் பதில் அளிக்காததால் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு சகாயராஜ் மற்றும் அவரது மனைவி யுவராணி(39) மற்றும் அவரது மகள் முத்துலட்சுமி ஆகியோர் துணியினால் தூக்கிட்டு தொங்கியுள்ளனர். இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் விஜயலெட்சுமி அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். இவர் சத்தம் போட்டுக்கொண்டு வெளியே ஓடிவந்ததனை பார்த்த அக்கப்பக்கத்தினர் என்னவென்று விசாரித்ததில் அவர்கள் இறந்து கிடப்பது தெரிய வந்தது. உடனே அருகில் இருந்த மக்கள் பொன்மலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலத்துறையினர் வீட்டு உரிமையாளிடம் விசாரித்ததில் இவர்கள் சம்பவம் நடந்த வீட்டிற்கு குடி வந்து ஒருமாதம் தான் ஆகிறது என்றும். மூன்று நாடுகளுக்கு முன்பு தொலைபேசியில் வீட்டு வாடகை கேட்பாதற்காக அழைத்தபோது யாரும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் போலீசார் துப்பு துலக்கியதில் ஒரு கடிதம் சிக்கியது அதில் சகாயராஜ் தனது அக்கா சுசீலா என்பவரிடம் 50 ஆயிரம் பெற்றுள்ளதாகவும் அவற்றை தனது ஆட்டோவினை விற்று எடுத்துக்கொள்ளுமாறும், தாங்கள் இறந்த செய்தியினை உறவினர்களுக்கு யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் போலீசார் உடல்களை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சியில் இதுப்போன்ற சம்பவம் அப்பகுதி மக்கள் அனைவரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

செய்தி- ஜெ.கே
