யாருக்கு ஓட்டு போட வேண்டும் நடிகர் விஜய் நிர்வாகிகளுக்கு சொன்ன ரகசியம்

0
Business trichy

“சில நாட்களுக்கு முன்பு விஜய் ரசிகர் மன்றத்தில் தஞ்சை, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு விஜய் வீட்டில் இருந்தே போன் போயிருக்கிறது. ’தளபதி உங்களை பார்க்கணும்னு நினைக்கிறாரு. நீங்க மட்டும் வாங்க. இந்த தகவல் வேற யாருக்கும் சொல்ல வேண்டாம்..’ என சொல்லி நேரத்தையும் நாளையும் குறித்திருக்கிறார்கள்.

வந்த ஒவ்வொருவரையும் கடுமையாக சோதனை செய்து, செல்போன், பர்ஸ் உட்பட அத்தனையும் வாங்கி வைத்துக் கொண்டுதான் விஜய் வீட்டுக்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். வீட்டுக்குள் அழைக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் விருந்து கொடுத்து உபசரித்திருக்கிறார்கள்.
அதன் பிறகு எண்ட்ரி கொடுத்திருக்கிறார் விஜய். ‘ரொம்ப நாள் ஆச்சு உங்க எல்லோரையும் பார்த்து… அதான் பார்க்கலாம்னு வரச் சொன்னேன். நாட்டு நிலவரம் எல்லாம் என்னன்னு உங்களை கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்னு இருக்கேன். எனக்கு சில சந்தேகங்களும் கேள்விகளும் இருக்கு. அதை நான் உங்ககிட்ட கேட்கப் போறேன். இதுல எதுவும் மறைக்கவோ, பொய் சொல்லவோ வேண்டிய அவசியம் இல்லை. உங்க மனசுக்கு தோன்றியதை நீங்க கேள்விப்பட்டதை சொல்லுங்க போதும். ரொம்பவும் சீரியஸா எல்லோரும் உட்கார்ந்து இருக்கீங்க… ரிலாக்ஸா இருங்க… மாவட்ட தலைவர்கள் யாரும் பேச வேண்டாம். உங்கள் அரசியல் நிலைபாடு எல்லாம் இங்க சொல்ல வேண்டாம். நம்ம மன்றத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பேசுங்க.. என்று பேச சொல்லியிருக்கிறார்.

மோடி ஆட்சி பத்தி மக்கள் என்ன நினைக்கிறாங்க… மக்கள் நினைக்கிறது இருக்கட்டும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க..’ என்று ஆரம்பித்திருக்கிறார். நிர்வாகி ஒருவர், ‘இவங்க கருப்பு பணத்தை ஒழிக்கிறேன்னு ஆரம்பிச்ச பிறகு எங்க பகுதியில் தொழில் சுத்தமா முடங்கிப் போச்சு. நான் ரெண்டு கம்பெனி நடத்திட்டு இருந்தேன். இப்போ ஒன்னை மூடிட்டேன் தளபதி…’ என்று சொல்லியிருக்கிறார்.

Kavi furniture

இன்னொரு நிர்வாகியோ, ‘எங்க பகுதியில் மோடியை பத்தியோ ராகுலை பத்தியோ யாரும் பேசலை. தேர்தல்னு வந்தால் அவங்க யோசிக்கிறது சூரியனா இலையா என்பதுதான். எடப்பாடி ஆட்சி மேல கோபமாதான் இருந்தாங்க. பொங்கலுக்கு 1000 அதுக்கு பிறகு ரெண்டாயிரம்னு எடப்பாடி கொடுத்ததும் அந்த கோபம் கொஞ்சம் குறைஞ்ச மாதிரி தெரியுது. முன்பெல்லாம் காலையில் டீக்கடை பக்கம் போனாலே எடப்பாடியை திட்டுவாங்க… இப்போ திட்டுறதை கேட்க முடியலை..’ என்று சொல்ல… விஜய் சிரித்திருக்கிறார்.

’அப்படின்னா எடப்பாடி ஓகே என்ற நிலைக்கு மக்கள் வந்துட்டாங்களா?’ என்று கேட்டாராம் விஜய். அதற்கு ஒரு நிர்வாகி, ‘எப்படியும் இன்னும் ரெண்டு வருஷத்துக்கு எடப்பாடிதான் முதல்வர் என்பது மக்கள் மனசுல பதிஞ்சு போச்சு. அவரை திட்டி என்ன செய்யுறது என்றுதான் மக்கள் நினைக்கிறாங்க. ஆனால் அதே நேரத்துல எடப்பாடி மேல உள்ள கோபம் மோடியை பாதிக்கும். கிராமங்களை பொறுத்தவரை எடப்பாடியால மோடிக்கு ஓட்டு குறையும், நகரங்களில் மோடியால எடப்பாடிக்கு ஓட்டு குறையும்..’ என்று சொல்லி இருக்கிறார்.

MDMK

அதைக் கேட்டு தலையாட்டிய விஜய், ‘கலைஞர் மறைவுக்கு பிறகு திமுகவுக்கான செல்வாக்கு எப்படி இருக்கு?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு பெரும்பான்மையான நிர்வாகிகள், ‘கலைஞர் இடத்தை நிச்சயமாக ஸ்டாலின் நிரப்பவில்லை. தமிழகத்தை வழிநடத்த வலிமையான தலைவர் ஸ்டாலின் என்ற நம்பிக்கை இன்னும் மக்களிடம் வரவில்லை. அதனால், ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் திமுக அலை வீசுகிறது என்று சொல்வதெல்லாம் பொய். நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும், சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் முட்டி மோதிதான் திமுக ஜெயிக்க முடியும்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்து கமல் பற்றியும் கேட்டிருக்கிறார் விஜய். ‘உங்க ஊரில் எல்லாம் கமல் கட்சியில் ஆட்கள் இருக்காங்களா?’ என்பதுதான் அந்த கேள்வி. ‘ஊருக்கு பத்து பேரு இருப்பாங்கண்ணா..அவரு வந்தாருன்னா கூட்டம் மட்டும் கூடிடுது. அவங்க எல்லாம் கட்சிக்காரங்க கிடையாது. சினிமாவுல பார்த்த கமலை நேரில் பார்க்கலாம்னு வர கூட்டம். அதெல்லாம் அவருக்கு ஓட்டாக மாறாது. விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்ச போது, எங்க ஊருல செம மாஸாக அவரு கட்சிக்குப் போனாங்க. அப்படியொரு மாஸு இப்போ கமலுக்கு இல்லை.’ என்று ஒரு நிர்வாகி சொல்ல.. ‘அப்படின்னா அதே மவுசு இப்போ விஜய்காந்த்க்கு இருக்கா?” என்றும் கேட்டிருக்கிறார் விஜய்.

‘இருந்துச்சு… இப்போ இல்லை.. எங்க ஊருல அவரு கட்சி மாவட்டச் செயலாளர்களே வேற கட்சிக்கு ஓடிட்டாங்க. அப்புறம் எங்கே தொண்டர்கள் இருப்பாங்க…’ என்று சொன்னாராம் ஒரு மாவட்ட நிர்வாகி.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட விஜய், ‘சரி… இதுல திமுக கூட்டணி சரின்னு நினைக்கிறவங்க மட்டும் கைதூக்குங்க..’ என்று கேட்டிருக்கிறார். மெஜாரிட்டியாக 70க்கும் மேற்பட்டவர்கள் கையை உயர்த்தி இருக்கிறார்கள். அதிமுக கூட்டணியை பற்றி கேட்டதும் மற்ற கைகள் உயர்ந்திருக்கின்றன.
மீண்டும் விஜய் பேசியிருக்கிறார். ‘எலெக்ஷன்ல யாருக்கும் ஆதரவு கொடுக்கவோ, அல்லது நாம கட்சி ஆரம்பிக்கவோ உங்களை நான் வரச் சொல்லவில்லை என்பதை தெளிவாக புரிஞ்சுக்கோங்க. மக்கள் என்ன நினைக்கிறாங்க என்பதை தெரிஞ்சுக்கத்தான் வரச் சொன்னேன்.

உங்களுக்கு யாரை புடிக்கிதோ அவங்களுக்கு ஓட்டுப் போடுங்க. இந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடணும் என நான் யாரையும் கட்டாயப்படுத்தப் போறது இல்லை. நாம அரசியலை பத்தி யோசிக்கிறதுக்கான நேரம் இது இல்ல. அப்படி ஒரு நேரம் வரும்போது பேசுவோம். நான் எப்பவும் உங்க தளபதியாக இருக்கத்தான் விரும்புறேன்.’ என்று சொல்லி முடித்திருக்கிறார் விஜய்.

‘தேர்தல் நேரத்தில் யாருக்கு ஓட்டுப் போடணும்னு சொல்லுவீங்களா?’ என ஒரு நிர்வாகி கேட்க, ‘நிச்சயமாக சொல்ல மாட்டேன். அது உங்க உரிமை. நீங்க நினைக்கிறதை செய்யுங்க..’ என்று சொல்லி எல்லோரையும் அனுப்பி வைத்திருக்கிறார் விஜய். எதற்காக அழைத்தார்.
இதற்கு இடையில் நடிகர் விஜய் திமுக தரப்பில் சபரீசனும், அதிமுக சார்பில் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கூட்டணிக்கு வர சொல்லி பேசியிருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் வழக்கம் போல் எந்த பதிலும் சொல்லாமல் அனுப்பி வைத்திருக்கிறார்.

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.