தேஜஸ் எக்ஸ்பிரஸ் எச்சரிக்கை பதிவு

0
1 full

 

தேஜஸ் எக்ஸ்பிரஸ் -இன்று (11/3 திங்களன்று காலை சென்னை எழும்பூரில் நடந்த சம்பவம் :

நானும் சில நண்பர்களும் வெளியூர் சென்று இன்று காலை எழும்பூரில் இறங்கிய போது, வேறொரு நண்பர் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்.

2 full

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், அவரும் அவரது Teen age-பெண்ணும் காலை புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸில் திருச்சிக்கு செல்ல வண்டி ஏறி விட்டார்கள்.
ஏறி, சீட்டில் அமர்ந்த பிறகு, தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டி Just -நேரெதிரே கடை இருந்ததால்( வண்டி கிளம்ப 7 -நிமிடங்கள் இருந்ததாம்) அவர் மட்டும் வண்டியை விட்டு இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்கும்போது, அந்த தேஜஸ் வண்டியின் எல்லா கதவுகளும் Automatic-ஆக மூடி Lock -ஆகி விட்டது. பதற்றத்தில் அந்த பிளாட்பாமில் உள்ளவர்கள் சிலர் TTE, மற்றும் Guard-ல் சொல்ல ஓட, வண்டிக்குள் கண்ணாடி ஜன்னலுக்குள் இருந்த அவரது பெண் கத்த, கூட இருந்தவர்களுக்கும் அது எதிர்பாராததொன்றாய் இருந்ததால் கதவுகள் திறக்க எல்லோரும் உதவக்கூடிய மனநிலையில் இருந்தாலும், அந்த Technology மற்றும் பயிற்சி இல்லாததாலும் , தெளிவு மக்களுக்குத் தெரியாததாலும், கிளம்பிய வண்டி சற்று வேகம் குறைந்ததைப்போல இருந்தாலும், சில நொடிகளிலேயே ஒன்றுமே நடக்காதது போல வேகமெடுத்து வண்டி போயே போய் விட்டது – அந்தப் பெண்ணின் தகப்பனை Platform-ல் விட்டு விட்டு !

அதன் பின், அவர் அந்த பெண்ணிடம் Mobile Phone -ல் மூலம் பேசி, பின்னர் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடனும் பேசி, தன் பெண்ணைக் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்து விட்டு, பின்னர் இவர் அடுத்த Train-ல், குருவாயூர் எக்ஸ்பிரஸில் செல்ல இருக்கிறார்.

மேற்கொண்ட இந்த சம்பவத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னவென்றால் –

1) தேஜஸ் எக்ஸ்பிரஸ் கிளம்புவதற்கு 5 -நிமிடங்கள் முன்பு அதன் எல்லா கதவுகளும் Automatic -ஆக மூடிக்கொள்ளும்.

2) அந்த Train-ல் டிக்கட் வாங்கும்போதே, டிக்கட்டில் வண்டி கிளம்ப 5- நிமிடங்களுக்கு முன்பாக கண்டிப்பாக இருக்கையில் அமர வேண்டும் என்று Instruction சொல்லப்பட்டிருக்கிறதாம்.

3) இந்த மாதிரி Critical -ஆன நேரத்திலும் கதவு திறக்குமாம். ஆனால், உள்ளிருந்துதான் திறக்க முடியும்- அதுவும் ஒரு சில Railway staff மூலமாக -ஏனென்றால், அவர்களுக்குத்தான் அதன் Password தெரியுமாம்.

( ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ) நாம் இந்த தேஜஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்ய நேர்ந்தால், அந்த வண்டி கிளம்ப( 5 நிமிடங்கள் என்ன) 10 நிமிடங்கள் முன்பாகவே தேவையான எல்லாப் பொருள்களுடன் இருக்கையில் கண்டிப்பாக அமர்ந்து விட வேண்டும்.

3 half

Leave A Reply

Your email address will not be published.