இந்திய ரயில்வே விதிப்படி ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும்

0

இந்திய ரயில்வே விதிப்படி ஊழியர்களை தேர்வு செய்யவேண்டும்

தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தல்

 

இந்திய ரயில்வே விதிப்படி கடைநிலை ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் துணைப்பொதுச்செயலாளர் மனோகரன் வலியுறுத்தி உள்ளனர்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தாழ்த்தப்பட்ட பிரிவில் 9,453, மலைவாழ் பழங்குடியினர் பிரிவில் 5,061, இதர பிற்படுத்தப்பட்டவர் பிரிவில் 16,502, பொதுப் பிரிவில் 31,889 என மொத்தம் 62,907 கடைநிலை ஊழியர்கள் பணியிடங்களுக்கு 16 ரயில்வே மண்டலங்களில் தேர்வு செய்ய 10.02.2018 ஒரு பொதுவான அறிக்கை வெளியிட்டது. அதில் தெற்கு ரயில்வே சென்னை தேர்வு வாரியத்தில் 1,550 பணியிடங்களுக்கான தேர்வும் இடம் பெற்றன. இதற்கான கல்வித் தகுதி 10 வது தேர்ச்சி.

 

food

நாடு முழுவதும் ஒரு கோடியே 7 லட்சம் பேர் இந்த வேலைக்கு விண்ணப்பித்தார்கள். இதற்கான தேர்வுகள் கணினி மூலம் பல கட்டங்களாக நடந்தது. கடந்த மார்ச் மாதம் 4ம்தேதி முடிவுகள் வெளியாயின. சென்னை தேர்வு வாரியத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் 90 சதவீதம் பேர் வட மாநிலத்தவர்கள்.

 

“இந்திய ரயில்வே நிறுவன விதிகள்” தொகுப்பு-1 இல் ரயில்வே காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யும் விதி முறைகள் இடம் பெற்று உள்ளன. விளம்பரம் என்ற தலைப்பில் இடம்பெறும்  விதி எண் 110 தற்போதைய  தர ஊதியம் ரூ. 4,200க்கு நிகரான ஊதியத்தை குறிப்பிட்டு, அதற்கு குறைவான தர ஊதியம் உள்ள பணிகளுக்கு அந்த பிரதேசங்களில், அதாவது சம்மந்தப்பட்ட மாநிலங்களில் ஆங்கிலம், இந்தி மற்றும் அந்த மாநில மொழிகளில் பணியாளர்கள் தேர்விற்கான விளம்பரம் செய்ய வேண்டும். மேலும், அந்த பிராந்தியத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு இந்த அறிவிப்பை அனுப்பி விளம்பரப்படுத்த வேண்டும்.

 

கடைநிலை ஊழியர்கள் முதல் நிலைய அதிகாரிகள் வரை இந்த தர ஊதிய வரையறைக்குள் வருபவர்கள். உயர்பதவிகளுக்கு மட்டும் இந்தியா முழுவதும் விளம்பரம் செய்ய வேண்டும் என்பதே விதி.

 

கடைநிலை ஊழியர்கள் தேர்விற்கு அந்தந்த மாநிலங்களில் விளம்பரம் செய்யாமல் இந்தியா முழுவதற்கும் சேர்த்து பொதுவான விளம்பரத்தைதேர்வு வாரியம் வெளியிட்டது. கணினி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பல கட்டங்களாக தேர்வு நடத்தியதால் ஒரே நபர் பல இடங்களில் பல கட்ட தேர்வுகளில் பங்கு பெற்றதை  கண்காணிக்க முடியாமல் போனது. தவறான பதில்களுக்கு 3 இல் 1 பங்கு மதிப்பெண் குறையும் என விளம்பரம்செய்த தேர்வு வாரியம் வினாத்தாள்களுக்கு நெறிபடுத்தும் மதிப்பெண்கள் எந்த சூத்திரத்தின் அடிப்படையில்  வழங்கப்படும் என்பதை தெரிவிக்க வில்லை. பணியாளர்கள் தேர்வு செய்யும் முறையில் பல்வேறு குளறுபடிகள் நடந்து உள்ளது.

 

ரயில்வே கடைநிலை ஊழியர்களை தேர்வு செய்து வரும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். “இந்திய ரயில்வே நிறுவன விதிகள்”படி அந்தந்த ரயில்வேமண்டல பகுதிகளில்(மாநிலங்களில்) விளம்பரம் வெளியிட்டு அந்தந்த மாநிலத்தவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

 

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.