திருச்சி கூட்டத்தில் மாநில அரசையும் மத்திய அரசையும் வெளுத்து வாங்கிய பிருந்தாகாரத்

0

மா.கம்யூ கட்சியை சேர்ந்த தோழர் பிருந்தாகாரத் திருச்சியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேச்சு…
~~~~~~~~~~~~~~~~

வரும் ஏப் 18-ல் நீங்கள் அளிக்கும் வாக்கில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பெற போகிறீர்கள்
– பிருந்தாகரத்.

உங்கள் வாக்கின் மூலம் மத்திய மோடி ஆட்சியையும், மாநில எடப்பாடி அரசையும் வீழ்த்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற தமிழ் பழமொழியை நிறைவேற்ற போகிறீர்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் லேடியா (அ) குஜராத்தின் மோடியா என சவால் விட்டு வெற்றி பெற்றார் “ஜெ”.

ஆனால் இன்றோ “மோடிதான் எங்களின் டாடி” எனும் அளவிற்கு அம்மாவை மறந்து கீழிறிங்கி விட்டனர் அதிமுக.

கஜா புயலின் போது ஆறுதல் சொல்ல வந்திருக்க வேண்டிய மோடி, அங்கே மஜா செய்து கொண்டிருந்தார்.

food

நாடாளுமன்ற தேர்தலுக்காக கடந்த ஒரு மாதத்தில் 4 முறை வந்த மோடி தமிழகத்திற்கு இதுவரை ஏதாவது செய்துள்ளாரா ?

ஆண்டிற்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்குவேன் என்று மோடி சொன்னாரே அது நடந்ததா ?.

45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் இன்று இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் லட்சக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றன.

விவசாயிகளின் தற்கொலை ஒருபுறம், 3 லட்சம் கோடி கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் கடன் தள்ளுபடி மறுபுறம். இதுதான் பிரதமர் மோடியின் சாதனை – திருச்சி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மா.கம்யூ பிருந்தாகாரத் பேச்சு.

gif 4

Leave A Reply

Your email address will not be published.