உலகளவில் வளர்ச்சி அடைய நமக்கு ஆங்கிலம் மிக அவசியம்

0
Business trichy

இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியின் ஏழாம் பட்டமளிப்பு விழா  கடந்த 9ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை ஏற்று கல்லூரியின் செயலர் திரு ராஜசேகரன் தொடங்கி வைத்ததார்.  இயக்குனர் முனைவர் பாலகிருஷ்ணன் மற்றும் முதல்வர் முனைவர் பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை இன்போஸிஸ் தலைமை அதிகாரி  பொறிஞர் சூரியநாராயணன் பங்கேற்றார்.

Kavi furniture
MDMK

முன்னதாக கல்லூரியின் அறிக்கையை கல்லூரி முதல்வர் முனைவர் பாரதிராஜா பதிவு செய்தார்.  அதில் மாணவ மாணவிகளின் சாதனைகள்  பேராசிரியர்களின் சாதனைகளை குறிப்பிட்டார்.

பின்னர் பட்டமளிப்பு உரை நிகழ்த்திய  சிறப்பு விருந்தினர் சூரியநாராயணன், தனது உரையில் முதலாவதாக புதிய பட்டதாரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர் தொடர்ந்து பேசுகையில்  மாணவர்கள் தாங்கள் தனி திறமைகளை வளர்த்து கொள்வதன் அவசியம் பற்றி குறிப்பிட்டார். பட்டம் பெற்ற பிறகும் நமது கல்வி கற்கும் திறனை தொடர வேண்டும். நமது அடிப்படை நோக்கம் தொழிற்நுட்பத்தை நோக்கி அமைய வேண்டும். நாம் உலகலளவில் வளர்ச்சி அடைய நமக்கு ஆங்கிலம் மிகவும் முக்கியமானது. ஆதனால் நாம் அதில் நன்கு தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறினார்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.