அனைத்து நாடார் அமைப்புகளின் ஓட்டு யாருக்கு !

0
Business trichy

அனைத்து நாடார் அமைப்புகளின் ஓட்டு யாருக்கு !

தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில செயற்குழு கூட்டம்  திருச்சியில் நடந்தது. இதற்கு பேரவையின் மாநில தலைவரும், பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனருமான என்.ஆர். தனபாலன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேலம் செல்லப்பன், பொருளாளர் சதாசிவம், துணை பொதுச்செயலாளர் வெற்றி ராஜன், அமைப்பாளர் விஜய் மாரீஸ், வழக்கறிஞர் பிரிவு தலைவர் மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

Kavi furniture

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

 

MDMK

தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிற சக்தியாக நாடார்களின் வாக்கு வங்கி உள்ளது. இந்நிலையில் நடைபெற இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் நாடார்களும், நாடார் இனத்தை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்களும் ஏனைய அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்படுவதை கண்டிக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து நாடார் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து எங்கள் நிலைப்பாட்டை முடிவு செய்து வெளிப்படுத்துவது.

 

காந்தி ஜெயந்தியன்று அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதை போல் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ந்தேதியன்றும் தமிழக அரசு அனைத்து மதுக்கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்வது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் 1954-ம் ஆண்டு காமராஜர் திறந்து வைத்த நுழைவு வாயிலை இடித்துவிட்டு, அங்கு புதிதாக நுழைவு வாயிலை கட்டி அதற்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வளைவு என பெயர் சூட்டியிருப்பதை வன்மையாக கண்டிப்பது.

 

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் திருச்சி மாநகர செயலாளர் போஸ் செல்வகுமார் வரவேற்றார். முடிவில் மாவட்ட தலைவர் காட்டூர் இளங்கோ நன்றி கூறினார்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.