மகாத்மா காந்தி சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

0
Business trichy

மகாத்மா காந்தி சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

MDMK

திருச்சியில் மகாத்மா காந்தி வருகை புரிந்து தேசிய கல்லூரி வளாகத்தில் அரசமரத்தடியில் அமர்ந்து சொற்பொழிவாற்றிய இடத்தை நினைவுக்கூறும் விதமாக சிறப்பு அஞ்சல் உறை திருச்சிஸ்ரீமதி இந்திராகாந்தி பெண்கள் கல்லூரி வளாகத்தில் வெளியிடப்பட்டது. அரசமரம் தற்போது ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.

மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் அம்பேஷ் உப்மன்யூ சிறப்பு அஞ்சல் உறையினை வெளியிட பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் மீனா பெற்றுக்கொண்டார். கல்லூரிச் செயலர் குஞ்சிதபாதம், சுதந்திர போராட்ட தியாகி வெள்ளைச்சாமி, மணியின் குமார் ரமேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக அஞ்சல் துறை தொழில் மேம்பாடு துணை இயக்குனர் குஞ்சிதபாதம் வரவேற்க, ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி முதல்வர் வித்யாலட்சுமி நன்றி கூறினார். நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் பங்கேற்றனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.