பாகிஸ்தானோடு போர் தவறாய் போன மோடியின் கணக்கு

0
Full Page

பிப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த அதே நாளில் காஷ்மீரின் புல்வாமா என்னும் இடத்தில் 350 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்துகள் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளோடு சேர்த்து வேனில் கொண்டு வரப்பட்டது. அந்த வேன் பத்து சோதனைச் சாவடிகளைக் கடந்தும் 10 அடிக்கு ஒரு துப்பாக்கி ஏந்திய இராணுவீரர்களின் பாதுகாப்பு வளையத்தில் இருந்த இந்திய இராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது. இராணுவ முகாமில் இராணுவவீரர்கள் பேருந்தில் ஏறி வேறு இடங்களுக்கு செல்ல அமர்ந்திருந்த நேரத்தில், வேனில் கொண்டுவரப்பட்ட RTX வெடிமருந்துகள் வெடித்து சிதற 41 இராணுவவீரர்கள் பலியாகினர்.

உடனே பாதுகாப்பு அமைச்சரவைக் கூடியது. இந்தத் தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் மீது உடனே நடவடிக்கை எடுப்போம் என்றார் பாதுகாப்பு அதிகாரி. பிரதமர் மோடி ஒரு படி மேலே போய் இராணுவவீரர்கள் சிந்திய ஒவ்வொரு துளி இரத்திற்கும் பாகிஸ்தான் பதில் சொல்லியாகவேண்டும் என்றார். இந்தியாவின் அனைத்துக் கட்சிகளும் மோடி எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிப்போம் என்று ஒருமித்தக் குரலில் கூறி தேசம் மோடியின் பின் நின்றது.


அடுத்த சில நாளில் அதிகாலை 3.00 மணிக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஆசாத் காஷ்மீர் பகுதியில், இந்திய இராணுவம் அத்துமீறி உள்ளே நுழைந்து வான்படைகள் மூலம் பல்வேறு பயங்கரவாதிகள் 350 எண்ணிக்கையில் அழிக்கப்பட்டார்கள் என்று காலைச் செய்திகள் சுடச்சுட வந்துக் கொண்டிருந்தது. தொலைக்காட்சியைப் பார்த்த மக்கள் பரவசம் அடைந்தார்கள். தில்லியில் நடுங்கும் குளிரில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆடியும் பாடியும் பட்டாசும் வெடித்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் சரிந்துக்கொண்டிருந்த செல்வாக்கை மீண்டும் சரிவிலிருந்து மீட்டு எடுத்து, ஆவேசமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நண்பகல் வாக்கில் வந்த செய்தி மோடியின் செல்வாக்கை மீண்டும் சரிக்கத் தொடங்கியது. இந்திய விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் காஷ்மீரில் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானி தமிழ்நாட்டைச் சார்ந்த அபிநந்தன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி இருநாட்டு எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

Half page

தில்லியிலிருந்து, கராச்சி, இஸ்லாமாபாத் செல்லவேண்டிய விமானங்கள் வான்படைத் தாக்குதலுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்று இரத்து செய்யப்பட்டன. மீண்டும் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி இந்திய விமானங்கள் குண்டு மழை பொழிந்தன என்று வான்படை அதிகாரி சொன்ன செய்தியை அப்படியே செய்தி ஊடகங்கள் வெளியிட்டு மக்களைப் பரபரப்புக்கு ஆளாக்கிக் கொண்டிருந்தன. அபிநந்தனை விடுவிக்க மோடி விறுவிறு நடவடிக்கை என்று முதல்பக்கம் செய்திகள் வெளியிடப்பட்டன. போர் எப்போது வேண்டுமானாலும் மூளலாம் என்ற கணிப்பு உறுதி செய்யப்பட்டன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்திய வான்படை குண்டு போட்டது உண்மை. ஆனால் 350பேர் இறக்கவில்லை. சர்வதேச செய்தியாளர்களை தாக்குதல் நடத்திய இடத்தைக் காட்டுகிறோம். உயிரிழப்பை அவர்கள் உறுதி செய்யட்டும் என்றார். இந்திய விமானப் படையை பாக். இராணுவ விமானப்படை விரட்டியடித்த காட்சியைக் பாக். காணொளியாக வெளியிட்டது. இந்தியா தாக்குதல் நடத்திய விடியோவை வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் இம்ரான்கான், “கைது செய்யப்பட்டுள்ள விமானி அபிநத்தன் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். நல்லெண்ண அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று அறிவிப்பை வெளியிட்டார்.

 

28.02.2019ஆம் நாள் நாடாளுமன்றத்தில் பேசிய இம்ரான்கான், மார்ச் 1ஆம் தேதி அபிநந்தன் விடுதலை செய்யப்படுவார் என்றும் உலகத்தில் யாரும் தீவிரவாதிகள் கிடையாது. யாருடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் நிராகரிக்கப்படுகின்றதோ… அவர்களே தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். இலங்கையில் விடுதலைப்புலிகளைத் தீவிரவாதி என்றார்கள். அவர்களின் கோரிக்கைகளை இலங்கை நிறைவேற்ற மறுத்தததால் போராட்டம் வெடித்தது என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்” என்றார்.

பாக். தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடு, அது அபிநந்தனை விடுதலை செய்யாது, இதனால் போர் மூளூம். இந்தியா பாக்.யை வெற்றிக் கொள்ளும் என்றும் இதை சாக்காக வைத்து மோடி நாடாளுமன்ற தேர்தலை 6 மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை ஒத்திவைக்க இரகசிய அஜெண்டா இருக்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா மோடியின் இரகசியத்தைக் கொளுத்திப்போட அது மோடிக்கு எதிராக வெடிக்கத் தொடங்கியது.
மார்ச் 1ஆம் நாள் மாலை 5.00 மணிக்கு பஞ்சாப்பில் எல்லையோர வாகா என்னுமிடத்தில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

 

இந்தியா முழுமையும் குறிப்பாக தமிழகத்தின் சமூக ஊடகங்களில் இம்ரான்கான் பாராட்டப்பட்டார். இம்ரான்கானின் இந்த மனிதாபிமான செயலை இந்தியா வரவேற்கவில்லை. பாஜக அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளோடு, “போர் நடத்தி செல்வாக்கை மீட்கலாம் என்று எண்ணிய மோடி இதிலும் தோல்வியடைந்தார்” என்று செய்தி வெளியிட்டிருந்தது. ஒருவேளை இது உண்மையாக இருக்கலாம். காலம் அதை பதிவு செய்யும்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.