வரலாறு, தமிழ் படிச்சா வேலை வாய்ப்பிருக்கா.. சம்பாதிக்க முடியுமா?

0
Business trichy

வரலாறு, தமிழ் படிச்சா வேலை வாய்ப்பிருக்கா.. சம்பாதிக்க முடியுமா?

 

‘ஆர்ட்ஸ் குரூப் சேருங்க’ என்று சொன்னவுடன், வரலாறு, தமிழ் படிச்சா வேலை வாய்ப்பிருக்கா.. சம்பாதிக்க முடியுமா? என்ற கேள்வி எழும்.. அதற்கான பதில்
இதோ..

‘வரலாறு, தமிழ், அரசியல் அறிவியல், சமூகவியல் போன்ற படிப்புகளுக்கு எதிர்காலமில்லை. எனவேதான் அவற்றை எங்கள் கல்வி நிறுவனங்களில் வைப்பதில்லை’ என்று சில கல்வி அமைப்புகள் பெற்றோரிடம் கூறுகின்றனர்.

Kavi furniture

இது சரிதானா?

“இது முற்றிலும் தவறானது. இன்றைய சூழலுக்கேற்ற இந்த பாடப் பிரிவுகளின் பாடத் திட்டங்களை மாற்றியமைக்கலாம். வரலாற்றுடன் பொருளியல், கணிணி அறிவியல் போன்ற நடைமுறைக்குத் தேவையான பாடங்களையும் துணைப் பாடங்களாக வைக்கலாம். இது நீண்ட கால செயல் திட்டம். நடைமுறைக்கு வர கொஞ்சம் காலம் பிடிக்கும்.

 

அதே நேரம் இப்போதுள்ள வரலாற்றுப் பாடத் திட்டத்தில் படித்தால் கூட நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன,” என்கிறார் வரலாற்றுப் பேராசிரியர் எம் கலியபெருமாள்.

 

கல்வித் துறையில்
தொடக்க, இடை நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் வரலாற்று ஆசிரியர்களாக, கல்வியாளர்களாக, வரலாற்று ஆய்வாளர்களாக பணியாற்ற இன்னமும் நல்ல வாய்ப்புகள் உள்ளன.

 

வரலாற்று ஆய்வாளர்களாக
தொல்லியல் ஆய்வுகள், அருங்காட்சியகங்கள், புதிய வரலாற்று ஆய்வுகளில் வரலாறு படித்தவர்களுக்குத்தான் இப்போதும் முதலிடம்.
எழுத்தாளர்களாக… எடிட்டர்களாக…
வரலாறு படித்தவர்கள், பெரிய எழுத்தாளர்களாக, பத்திரிகை மற்றும் வெளியீட்டு நிறுவனங்களில் ஆசிரியர்களாக வர வாய்ப்புகள் அதிகம். காரணம், அறிவியல் படித்தவர்களுக்கு கிடைக்காத படிப்பு அனுபவம், மொழி ஆளுமை வரலாறு படித்தவர்களுக்கே அதிகம்.

 

MDMK

நூலகத் துறையில்
வரலாற்றை முக்கிய பாடமாகப் படித்து, கூடவே நூலக அறிவியல், பத்திரிகையியல், கணிணியியல் போன்றவற்றில் பட்டயமோ, பட்டமோ பெற்றவர்களுக்கு நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், செய்தித் துறை அலுவலகங்கள் போன்றவற்றில் நல்ல வேலைகள் காத்திருக்கின்றன. இந்த வாய்ப்புகள் கால மாற்றங்கள் எத்தனை வந்தாலும் மாறாதவை, குறையாதவை.

 

மார்க்கெட்டிங்
மார்க்கெட்டிங், இன்சூரன்ஸ், பங்கு வர்த்தகம் போன்றவற்றிலும் கூட வரலாற்றை முக்கியப் பாடமாகப் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.

 

ஆட்சித் துறையில்
நாட்டின் ஆட்சித் துறையில் வரலாறு படித்தவர்களுக்கே இன்றும் முதலிடம். ஐஏஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கான தேர்வுகளில் வரலாறு, பொருளியல் போன்ற கலைத் துறை பட்டதாரிகளே இன்றும் முதலிடம் வகிக்கிறார்கள்.

 

தமிழ் படித்தாலும்
தமிழ் போன்ற மொழியியல் படிப்புகள் எவர்கிரீன் எனும் அளவுக்கு என்றும் முக்கியத்துவம் மாறாதவை. தமிழ் படித்தால் அதிகபட்சம் ஆசிரியராகலாம், அவ்வளவுதானே என சிலர் அலட்சியம் காட்டலாம்.

 

ஆனால் தமிழ்ப் படித்தவர்களுக்கே தமிழ்நாட்டில் அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது சட்ட உத்தரவும் கூட.

ஆட்சிப் பணி, கல்விப் பணி, சமூகப் பணி, நிர்வாகம், வர்த்தகம் என அனைத்திலுமே தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. தமிழை ஒரு படிப்பாக மட்டும் பார்க்காமல், பிடிப்புடன் படித்தால் நல்ல எழுத்தாளராகலாம்.

 

இன்று உலகெங்கும் தமிழர்கள் பரவிக் கிடக்கிறார்கள். தமிழில் பண்டிதம் நிரம்பியவர்களுக்கு சென்ற இடமெல்லாம் வேலை வாய்ப்பும் சிறப்பும் என்றைக்கும் நிச்சயம் எனும் நிலை!

 

எனவே அறிவியல் படிப்புகளுக்கு இணையாக, வேலை மற்றும் சம்பாதிக்கும் வாய்ப்புகள் வரலாறு, தமிழ் போன்ற கலைப் படிப்புகள் முடித்தவர்களுக்கும் உள்ளன என்பதை உணருங்கள். எடுக்கும் பாடப் பிரிவை உணர்ந்து படியுங்கள்.

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.