தோட்டக்கலைத்துறை மூலம் தொழில் பழகுநர் பயிற்சி

0
Business trichy

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்

தோட்டக்கலைத்துறை மூலம் தொழில் பழகுநர் பயிற்சி

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், தோட்டக்கலைத்துறை மூலம் தொழில் பழகுநர் பயிற்சியில் ஈடுபட ஆர்வமுள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

Kavi furniture

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், தோட்டக்கலைத்துறை, விவசாயிகளின் உற்பத்தியினை இருமடங்காக்கி வருமானத்தை மும்மடங்காக உயர்த்தும் முக்கிய நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

MDMK

தொழில் பழகுநர்பயிற்சி அளிப்பதன் மூலம், சந்தையில் வேலைவாய்ப்பு அளிப்பவர்களுக்கும், திறன் மிக்க மாணவர்களுக்கும் உள்ள இடைவெளியினை பூர்த்திசெய்யவும், விவசாயிகளுக்கும், தொழில்நுட்பத்திற்கும் இடையே இணைப்புபாலமாக விவசாயிகளுக்கு உதவும் வகையில் 500 தொழில் பழகுநர்களுக்கு தோட்டக்கலைத் துறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கார்டன் பயிற்சிக்கு குறைந்த கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்புஃதோட்டக்கலையில் டிப்ளமோ இருத்தல் வேண்டும் னுசயரபாவளஅயn ஊiஎடை, எலக்ட்ரிசியன், ப்ளம்பர், பிட்டர் மற்றும் கார்டனர் துறையில் அங்கீகரிக்கப்பட்ட தகுதித் தொகுப்பிலுள்ள குறுகியகால திறன்களில் பயிற்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

தொழில் பழகுநர் பயிற்சியின் மூலம் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஒரு வருடகாலம் பயிற்சிபெற்ற தொழில்நுட்ப தகுதியுடைய மற்றும் முன் அனுபவம் இல்லாத இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களில் பணிபெறுவதற்கான வாய்ப்பளிக்கப்படுகிறது. ஓராண்டு பயிற்சி முடித்தபின் தொழில் முனைவோர் பயிற்சி மையத்தினர் நடத்தும் ஆன்லைன் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றபின் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் மாநில, மத்திய மற்றும் அயல்நாடுகளில் பணிபுரியவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் ஒராண்டிற்கு 500 தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் மாதம் ரூ.7000 உதவிதொகையாக வழங்கப்படும்.

எனவே, தொழில் பழகுநர் பயிற்சியில் ஈடுபட ஆர்வம் உள்ள இளைஞர்கள் வnhழசவiஉரடவரசந.வn.பழஎ.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர் த்திசெய்து னனாவசைரஉhi@பஅயடை.உழஅ என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி பயன்பெறலாம். இவ்வாறு திருச்சிராப்பள்ளி, மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.